25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
PSORIASIS
மருத்துவ குறிப்பு

சொரியாசிஸ் – தவிர்க்க வேண்டியவை

‘சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் உண்டாகிறது. இதன் விளைவாக தோல் தடித்து மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிரும், புரையோடும். தோலிலுள்ள பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.
சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை / சிவப்பு திட்டுகளாக (Silver Scaly patches) காணப்படும். உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும். சொரியாசிஸ் தொற்று நோயல்ல.
இது மற்றவர்களுக்கு பரவாது சுகாதார குறைவு காரணமாக இது ஏற்படாது. சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் பாதிப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 25% பேர் சொரியாசிஸ் நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே, சிலருக்கு மரபு நிலை காரணமாகிறது.
உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் ஹார்மோன்ஸ், சில ஆண்ட்டி ஹைபர் டென்சிவ் போன்ற சில மருந்துகள், சொரியாசிஸை மேலும் மோசமாக்கும். குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கும். சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் வரலாம். சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், கருமை நிறத்தையும், நகங்கள் தடிப்பையும், ஏற்படுத்தும். நகம் உடையலாம்.
சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கலாம். சொரியாசிஸ் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். வழக்கமாக 20-வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம். ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு நிலை மாற்றங்கள் ஏற்படும்.
சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை :
* தோலைச் சொரியாதீர்கள். ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.
* ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.
* சொரியாசிஸைக் கட்டுப்படுத்த தரப்பட்ட மருந்துகளையும், மருத்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.
* மருந்துகளை தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
* தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும்.
* சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.
* மன அழுத்தம் சொரியாசிஸை அதிகப்படுத்தும். அமைதியாக இருக்கவும், உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும்
உணவு முறை :

உணவு முறையை பொறுத்த வரை கீழே உள்ளதை மட்டும் தவிர்த்தால் போதும்.
* பால்
* மது
* காளான் (இது பூஞ்சான் வகைகளை சேர்ந்தது. சொரியாசிஸ் அல்லாதவர்களும் இதனை உட்கொள்ள கூடாது என்பதே உண்மை.).
* உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் உணவு வகைகள். இதனை மட்டும் கடை பிடித்தால் போதுமானது.PSORIASIS

Related posts

பட்டாசு வெடிக்க பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் முதலுதவி

nathan

மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு

nathan

உங்களை அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வைக்கும் ஆபத்தான அன்றாட பழக்கவழக்கங்கள்!!!

nathan

டெங்குக்காய்ச்சலின் அறிகுறிகள் எவை? மருத்துவர்.S.கேதீஸ்வரன்

nathan

உங்களுக்கு தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்

nathan

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

nathan

தினம் ஒரு நெல்லிக்காய்

nathan

பெருங்காயம்… கடவுளின் அமிர்தம்!

nathan

மகளிர் முன்னேற்றத்தில் பங்கு கொள்வோம்

nathan