28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
plums
ஆரோக்கிய உணவு

இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பிளம்ஸ்

நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ், ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புத்துணர்ச்சி மிக்க பிளம்ஸ் பழத்தில் விட்டமின் சி, நிறைந்துள்ளது. இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்பட வல்லது. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், விட்டமின் சி யின் பங்கு மகத்தானது.
இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பிளம்ஸ்
தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் தன்மையும் விட்டமின் சி-க்கு உண்டு. விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. விட்டமின் ஏ, பார்வைத் திறனுக்கு மிக அவசியமானது. நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் விட்டமின் ஏ-விற்கு உள்ளது. பொட்டாசியம், புளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ளன. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புத்தாது மிக அவசியம்.
பொட்டாசியம் உடலை வளவளப்பு தன்மையுடன் வைப்பதிலும், இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பங்கெடுக்கிறது. பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு விட்டமின் கே, உள்ளது. இது இரத்தம் உறைதலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை குறைப்பதிலும் பயன்படுகிறது. கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது.
இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம். இரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். ரத்தத்தை சுத்திகரிக்க பிளம்ஸ் பழங்களை சுவைக்கலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவு நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும். பூரிதமாகாத கொழுப்புகள் இதில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச் சத்துக்கள் உள்ளன. பிளம்ஸ் பழங்கள் தோலுடன் அப்படியே சுவைத்துச் சாப்பிட ஏற்றது. இனிப்பு சுவையுடன், சாறு நிறைந்த இதனை களிப்புடன் சாப்பிடலாம்.plums

Related posts

சிறுநீரக நோயாளிகளுக்கும் ஏற்ற தாமரை உணவுகள்

nathan

சாப்பிடக்கூடாத காய்கறிகள் என்னென்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

நல்லெண்ணெயை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

மைதாவில் செய்யும் பரோட்டா உடலுக்கு கெடுதலா?

nathan

சமைக்கலாம் வாங்க! கொண்டைக்கடலை கீரை சுண்டல்

nathan

தினமும் காலை உணவாக இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்

sangika