29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Capture
மருத்துவ குறிப்பு

சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு. Chronic Kidney Disease -Dr.திவாகரன் சிவமாறன்.

எமது சிறுநீரகமானது தினமும் உடலில் உண்டாகும் நச்சுத்தன்மையான பொருட்களை வடிகட்டி இரத்தத்தை சுத்தம் செய்கிறது. உடலில் தேவைக் கதிகமாக சேரும் உப்பையும் நீரையும் வெளியேற்றுகிறது. இரத்தத்தின் அமில, காரத்தன்மையை சரியாகப்பேணுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

சிறுநீரகங்களின் செயற்பாடு சற்று குறைவடைவதால் உடலில் சேரும் கழிவுப் பொருட்களின் அளவும் சற்று அதிகமாகிறது. உங்கள் சிறுநீரகத்தில் ஏற்பட்ட சில நிரந்தரமான பாதிப்புக்களே இதற்குக் காரணமாகும். நீங்கள் சரியான வைத்திய ஆலோசனையைப் பெற்று முறையாக சிகிச்சையைப் பின்பற்றுவதனால் உங்கள் சிறுநீரகமானது மேலும் பழுதுபடும் வேகத்தைக்குறைக்க முடியும்.

பல்வேறு காரணங்களால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது பொதுவாக கட்டுப்பாடில்லாத சலரோக நோயாளருக்கும், உயர்குருதியழுத்த நோயாளருக்கும் அதிகமாக ஏற்படுகின்றது. இதற்கான மற்றைய காரணங்களாக சிறுநீரகத் தொகுதியில் ஏற்படும் ஒருவித அழற்சி (Glomerular Nephritis) பரம்பரையாக வரும்சிறுநீரக கட்டிகள், சிறுநீரகத்திற்கான குருதி நாடி ஒடுக்கமடைதல் போன்றன காணப்படும். அத்துடன் நீங்கள்பாவிக்கும் சில வலியைப் போக்கும் மருந்துகளும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இந்தப் பாதிப்பு 50 தொடக்கம் 60 வீதத்தை விட கூடவாக உள்ள போதே இதன் அறிகுறிகள் சில உங்களுக்கு தோன்றலாம்.

இதன் அறிகுறிகளாவன

1. உடல் பலவீனமான தன்மை.
2. உடற்சோர்வு, களைப்பு
3. பசி இன்மை
4. வயிற்றுக்குமட்டல்
5. தசைகளில் ஏற்படும் நோ
6. அதிகம் சிறுநீர் வெளியேறல்
7. உடலில் நீர்த்தேக்கத்தால் கால்கள் வீங்குதல்
8. இரத்த அழுத்தம் அதிகரித்தல்
9. தோல் உலர்வாக காணப்படல், உடலில் ஏற்படும் கடி போன்றன ஆகும்.

நீங்கள் உங்கள் உணவில் உப்புப் பாவனையை முற்றாக தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால் மேலதிக உப்புப் பாவனையைக் குறைப்பது நல்லது. உங்கள்குருதியில் பொட்டாசியத்தின் அளவு கூடவாகவுள்ள போது நீங்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளான பழங்கள், இளநீர் போன்றவற்றை குறைவாக பாவிப்பது நல்லது. அத்துடன் பழரசம் (Fruit Juice ) மற்றும் molt சேர்க்கப்பட்ட பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

நீங்கள் சாதாரண புரத உணவுகளை எடுக்கலாம். அதாவது 0.8 g /kg என்ற அளவில் எடுக்கலாம். (உணவிலுள்ள புரத அளவுகள் உதாரணமாக 500ml பாலில் 17g புரதமும் 150 g சமைத்த இறைச்சியில் 26-28g புரதம் உள்ளது). கொழுப்புச் சத்து கூடிய உணவுகளை குறைப்பது நல்லது. (பொரித்த உணவுகள், butter, நெய் ) குருதியில்கொழுப்பு கூட உள்ளவர்கள் வைத்தியர் ஆலோசனைப்படி சற்றின் (statin) வழங்கப்படும். அவற்றை வைத்திய ஆலோசனைப்படி ஒழுங்காக பாவித்தல் அவசியமாகும்.

சிறுநீரக செயலிழப்பால் இரத்தத்தின் சிவப்பணு உற்பத்தி குறைவடைவதால் குருதிச்சோகை ஏற்படுகிறது.
உங்களுக்கு சில சந்தர்ப்பத்தில் erythropoietin என்ற hormone ஊசி மூலம் வழங்கப்படும்.

உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பின் காரணமாக எலும்பு முறிவு ஏற்படும் சந்தர்ப்பங்களை குறைத்துக்கொள்ள உங்கள் எலும்புகளை பாதிப்புக்குள்ளாகாத வாறு பாதுகாத்துக் கொள்வது நல்லது.

சிறுநீரக செயலிழப்பால் கல்சிற்ரோல் (CalCitriol) உற்பத்தி குறைவடைகிறது. விற்றமின் டி ((Vitamin D)யின் தொழிற்பாட்டு வடிவத்தின் உற்பத்தியும் குறைவடைகிறது. இதற்காக உங்களுக்கு கல்சிற்ரோல் (CalCitriol), Cifa Calicidol போன்ற மருந்துகள் வழங்கப்படும். இவற்றை ஒழுங்காகப் பாவித்தல் வேண்டும்.

சிறுநீரகச் செயலிழப்பின் இறுதிக்கட்டத்தில் சிறுநீரகத்தின் தொழிற்பாடு மிகவும் குறைவாகும். இந்நிலையில் குருதியிலுள்ள கழிவுப் பொருட்களை அகற்றுவது சிறுநீரகத்தால் இயலாமல் போகிறது. இதன்போது குருதிக் கழிவுகளை அகற்றுவதற்கு மாற்றுவழிகள் தேவைப்படுகின்றன.இதற்கு dialysis (டயலிசிஸ்) எனும்
முறை தேவைப்படுகிறது. இது 2 முறைகளில்வழங்கப்படுகிறது

இதில் Haemodialysis (இரத்தச்சுத்திகரிப்பு) என்பது உடலிலுள்ள குருதியானது ஒரு கலனின் ஊடாக செலுத்தப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட குருதி மீண்டும் உடலினுள் அனுப்பப்படுகின்றது. இது ஒரு வாரத்தில் எத்தனை முறை செய்ய வேண்டும் என்பதை உங்கள் வைத்தியர் தீர்மானிப்பார்.

Haemodialysis இற்காக உங்கள் குருதியின் நாடியையும் நாளத்தையும் இணைத்து Av fistula எனும் ஒரு சிறிய சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்படும். இதற்காக உங்களின் வளமற்ற கையே தெரிவுசெய்யப்படும். பொதுவாக இடது கை. எனவே நீங்கள் இந்தக்கையில் ஊசி ஏற்றுதல் நாள மூலம் ஊசி ஏற்றுதல், குருதி எடுத்தல், போடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு Av fistula செய்ய இருப்பதாக வைத்தியர் தீர்மானித்துக் கூறினால் நீங்கள் அதுபற்றி தாதிய உத்தியோகத்தரிடம் கூறி உங்கள் வளம் அற்ற கையில் ஊசி மற்றும் cannula போடுவதை தவிர்த்துக் கொள்ளவும்

நீங்கள் dialysis இல் இருக்கும் போது ஒரு நாளுக்கு நீங்கள் பருகும் நீரின் அளவை வைத்தியரின்ஆலோசனைப்படி பருக வேண்டும். ஏனெனில் மேலதிகமாக நீங்கள் அருந்தும் நீரை சிறுநீரகத்தால் வெளியேற்றுவது கடினமாகும்.

Peritoneal dialysis என்பது ஒரு திரவப் பதார்த்தம். உங்கள் வயிற்றினுள் செலுத்தப்பட்டு அதன் மூலம் உங்கள் உடலில் உள்ள அழுக்குகள் அகற்றப்படும் ஒரு முறை ஆகும். நீங்கள் குறைந்த வயதினராக இருப்பின் சிறுநீரக
மாற்று சத்திரசிகிச்சையானது உங்கள் பிரச்சினைக்குத் தீர்வாக அமையலாம். இதுபற்றி மேலதிக ஆலோசனைகளை உங்கள் வைத்தியர் வழங்குவார்.

சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்குரிய ஒழுங்கான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் மேலும் சிறுநீரகம் முற்றாகப்பாதிக்கப்பட்டு இறுதி நிலைக்கு செல்லும் வேகத்தை குறைக்க முடியும்.

சிறுநீரக செயற்பாட்டின் இறுதி நிலையில் உள்ள வர்களுக்கும் Haemodialysis மற்றும் Peritoneal dialysis எனும் குருதிச்சுத்திகரிப்பு முறைகளும் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையும் பயனுள்ளதாக அமையும்.

Dr.திவாகரன் சிவமாறன்.
யாழ். போதனா வைத்தியசாலைCapture

Related posts

சர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்கான அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கால்சியம் குறைபாடுகளின் அறிகுறிகளும்… தீர்வுகளும்…

nathan

இதை கட்டாயம் படியுங்கள் கருத்தரித்தலுக்கு தடையாக இருக்கும் கருப்பை நீர்க்கட்டிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோயை குணப்படுத்தும் பப்பாளி இலைகள்…

nathan

கீழ்படியாமல் நடக்கும் குழந்தைகளைக் கையாளுவது எப்படி?

nathan

ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோர்களிடம் மறைக்கும் 6 விஷயங்கள்!!!

nathan

இனி, உங்கள் நினைவுகளை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் – ஆராய்ச்சியில் கண்டுப்பிடிப்பு!!!

nathan

காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..

nathan

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடலில் ஆக்ஸிஜன் மிகக் குறைவு என்று அர்த்தமாம்.

nathan