என்னென்ன தேவை?
குடைமிளகாய்-1,
தக்காளி- 1, வெங்காயம்-1,
பனீர்- சிறிது.
மசாலா அரைக்க…
கொத்தமல்லி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது),
புதினா – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் – 3,
தனியா 1/4 கப்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
பூண்டு – 10 பல்,
இஞ்சி – 1 துண்டு,
உப்பு-தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மசாலா பொருட்கள் அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும். பனீரைப் பெரிய துண்டுகளாக வெட்டி நடுவில் துளையிட்டு, அரைத்த மசாலாவைப் பூசிக் கொள்ளவும். பின் எண்ணெயை தோசைக்கல்லின் மேல் தடவி ஊற வைத்த பனீரை, சிவக்க வறுத்துப் பின் கபாப் கம்பியில் ஒரு பனீர், ஒரு குடைமிளகாய் துண்டு, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி என்று மாற்றி மாற்றி குத்திப் பரிமாறவும்.