சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி
தேவையான பொருட்கள் :
தயிர் – 1 கப்
வேர்க்கடலை – 1 கப்
தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்றவாறு
தாளிக்க :
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
வேர்க்கடலை – 1 டீஸ்பூன்
செய்முறை :
* வறுத்த வேர்க்கடலையை எடுத்து, தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில், மிளகு, சீரகம், கடுகு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து ஆற விடவும்.
* ஆறியபின் மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்த பின் அதனுடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக கடைந்து விட்டு அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, வேர்க்கடலைப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பச்சடியில் கொட்டிக் கிளறி விடவும்.
* இந்த பச்சடி கலந்த சாதம், சப்பாத்தி மற்றும் கார அடையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.