26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
sl4033
சைவம்

பாஸ்தா பிரியாணி

என்னென்ன தேவை?

பென்னே பாஸ்தா – 200 கிராம்,
நீளமாக நறுக்கிய
(குடைமிளகாய் – 1/4 கப்,
கேரட், பீன்ஸ் – 1/4 கப்,
வெங்காயம் – 1/4 கப்,
தக்காளி – 1/4 கப்,
காலிஃப்ளவர் – 1/4 கப்).

தாளிக்க…

எண்ணெய் – 1/4 கப்,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சோம்பு – 2 டீஸ்பூன்,
பட்டை – 2,
கிராம்பு -2,
பிரிஞ்சி இலை – 2.

பிரியாணி மசாலா தயாரிக்க…

பொடியாக நறுக்கிய
(தக்காளி – 2 கப்,
கொத்தமல்லி – 1/2 கப்,
புதினா – 1/2 கப்), தயிர் – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 2 டீஸ்பூன்,
ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா 4,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பென்னே பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி நீரில் அலசி ஒரு தட்டில் பரத்தவும். கடாயில் எண்ணெய், வெண்ணெய் காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை தாளித்து பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின் எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கவும், காய் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும். மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வதங்கியவுடன் பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கவும். நன்றாக கலந்து வதங்கியவுடன் சுடச்சுட பரிமாறவும். சிப்ஸ், பச்சடியுடன் சாப்பிடலாம்.sl4033

Related posts

குழந்தைகளுக்கான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன்

nathan

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்

nathan

ஆரஞ்சு பச்சைப் பட்டாணி புலாவ்

nathan

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

பன்னீர் மசாலா

nathan

மதுரை உருளைக்கிழங்கு மசியல்

nathan

பனீர் 65

nathan

கொத்தமல்லி புலாவ்

nathan

சாமை சாம்பார் சாதம் செய்வது எப்படி

nathan