23.9 C
Chennai
Thursday, Dec 26, 2024
201611121314573880 More times heating inedible dishes SECVPF
ஆரோக்கிய உணவு

அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்

இரவிலேயே உணவை சமைத்து வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அவற்றை சூடேற்றி சாப்பிடுவோர் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நம்மால் உணவுகளை சமைத்து சாப்பிட முடியவில்லை. இதனால் எளிதில் வெறுமனே சூடேற்றி சாப்பிடக்கூடிய உணவுகளை நாடுகின்றோம். இப்படி இருப்பதால் தான் என்னவோ, இன்றைய தலைமுறையினருக்கு பல்வேறு நோய்கள் வேகமாக தாக்குகின்றன.

அதிலும் காலையில் எழுந்து சமைப்பதற்கு நேரம் இல்லை என்று, இரவிலேயே உணவை சமைத்து வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அவற்றை சூடேற்றி சாப்பிடுவோர் பலர். நீங்கள் இந்த வகையை சேர்ந்தவர்கள் என்றால் இதை கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டும். இப்போது அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகளை பார்க்கலாம்.

* சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அத்தகைய சிக்கனை 2-3 முறைக்கு மேல் சூடேற்றி உட்கொண்டால், அதன் காரணமாக பல்வேறு செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சிக்கனை வாங்கி சமைத்தால், தேவையான அளவு மட்டும் உபயோகித்துவிட்டு, மீதமுள்ள ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். தேவைப்படும் போது சமைத்து சாப்பிடுங்கள்.

* பசலைக்கீரையில் இரும்புச்சத்தும், நைட்ரேட்டுகளும் வளமாக உள்ளது. இதனை பலமுறை சூடேற்றினால், அதில் உள்ள நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகளாக மாற்றப்படுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களாகவும் மாறும். எனவே இந்த கீரையை கொண்டு சமைத்த உணவுகளை பலமுறை சூடேற்றாதீர்கள்.

* முட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்தும் சாப்பிடக்கூடாது. ஆய்வு ஒன்றில் முட்டையை பலமுறை சூடேற்றி உட்கொண்டால், அது செரிமான மண்டலத்தை கடுமையாக பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

* காளான்களில் காம்ப்ளக்ஸ் புரோட்டீன்கள் உள்ளதால், இதனை வாங்கி ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றாதீர்கள். இதனால் தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

* உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்த பின்னர், மீண்டும் சூடேற்றி உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள ஒருசில சத்துக்களானது பலமுறை சூடேற்றும் போது நச்சுமிக்கவையாக மாறிவிடும். மேலும் உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து, வேக வைத்து சாப்பிடுங்கள். இதனால் அதிலிருந்து முழு சத்தையும் பெற முடியும்.201611121314573880 More times heating inedible dishes SECVPF

Related posts

சூப்பர் டிப்ஸ்! காலையில் 12 கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

வெறும் வயிற்றில் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால்

nathan

வேர்கடலை சாட்

nathan

தக்காளி சாலட்

nathan

சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் நெய்யும் வெல்லமும் கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஆரோக்கியத்துக்கு அவகேடோ!

nathan

வெறும் வயிற்றில் கற்றாழை சாறை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா?

nathan

அடிக்கடி காய்ச்சல் மற்றும் பிற நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வது எப்படி…?

nathan