24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
16b6e78b d759 402e b25c 5742295bd93d S secvpf
ஆரோக்கியம் குறிப்புகள்

வாகனம் ஓட்டுபவர்களுக்கு வரும் முதுகு வலிக்கு டாட்டா சொல்லுங்க

இரண்டு-மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கு, இந்தப் பிரச்சனை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கார், பஸ் ஓட்டும் டிரைவர்களும் முதுகு வலிக்குத் தப்புவது இல்லை! தொடர்ந்து பைக், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி பிரச்சனைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம்.

இதற்குக் காரணம், பைக் மற்றும் கார்கள் அல்ல. குண்டும் குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுத் தண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் பைக் ஒட்டுவதோடு, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்தப் பிரச்சனை இன்னும் அதிகரித்துவிடும். பொதுவாக, ஸ்கூட்டர்கள் ஓட்டுவது (குறைந்த தூரப் பயணங்களுக்கு) ஓரளவுக்கு முதுகு வலித் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும்.
அதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான பைக்குகளை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. முதுகு வலிப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான பைக்கைப் பயன்படுத்தலாம். அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் ‘லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகு வலி வராமல் தடுப்பதற்கு ‘பேக் எக்ஸர்ஸைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்! வாகனம் ஓட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை.
* மிகவும் இறுக்கமான பேண்ட், பெல்ட் அணிந்துகொண்டு பைக் ஓட்டுவதை நிறுத்துங்கள். இவை இறுக்கமாக இருக்கும்போது, நம்மால் சரியான பொசிஷனில் உட்கார்ந்து பைக் ஓட்ட முடியாது. இது, முதுகுவலிப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும் போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும்போது இடுப்பில் இறுக்கம் இல்லாமல் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஓட்டப் பழகுங்கள்.
* அடி முதுகு (லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் ‘லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்குத் தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம். அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது பெரிய டவலை முக்கோண வடிவில் மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.
* தொடர்ந்து பைக் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்துங்கள். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல! 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்யுங்கள். அதேபோல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால், அடிக்கடி கால்களை நீட்டி மடக்குவது நல்லது.
* குண்டும் குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியைத் தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும் குழியுமான சாலைகள்தான் முதுகு வலித் தொல்லைகள் ஏற்பட முக்கியக் காரணம்.
* தினமும் அரைமணி நேரம் நடப்பது, முதுகுவலி உள்பட பல்வேறு வலிகள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும். ஸ்டீம் தெரபி, மசாஜ் ஆகியவை முதுகு வலிக்கு நிவாரணமாக அமையும். நீச்சல் பயிற்சி செய்வதும் நல்லது!16b6e78b d759 402e b25c 5742295bd93d S secvpf

Related posts

எது நல்ல டூத் பேஸ்ட்? தேர்ந்தெடுக்க ஈஸி டிப்ஸ்

nathan

உட்கார்ந்தபடியே அதிக நேரம் வேலை பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

திரவ டயட் உண்மையில் எடையை குறைக்க உதவுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…ஏன் குழந்தை பிறக்கும்போதே அதிக முடியுடன் பிறக்கிறது தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…கண்ணிமை துடித்தால் பணம் வரும் என்பது உண்மையா?

nathan

கண் பார்வை சீர்கெடாமல் இருக்க நீங்கள் தவறியும் செய்துவிட கூடாதவை!!

nathan

ஆபத்தான கொப்புளத்த எப்படி செலவில்லாம சரி பண்ணலாம்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அறிந்திராத பெண்ணுரிமைச் சட்டங்கள்!

nathan

சாப்பிடும்போது ஏன் டி.வி. பார்க்கக்கூடாது?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan