23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
non veg 003
ஆரோக்கிய உணவு

அசைப்பிரியரா நீங்கள்? கண்டிப்பாக படிக்கவும்

சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கே இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அசைவ உணவுகள் சாப்பிடுவதன் மூலரம் கலோரி, புரதம் போன்ற சத்துகள் கிடைத்தாலும் சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன.
தீமைகள்
அசைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதும் இருதய நோய்க்கான ஒரு காரணமாகும்.
மாமிச உணவில் அதிகம் உள்ள இந்த புரதச்சத்து அதிகளவில் ஜீரண நீர் சுரக்கக் காரணமாக இருப்பதால் ஜவ்வுப் பகுதியில் உள்ள க்ளைகோ புரதத்தைப் பாதித்து மியூகஸ் ஜெல் என்ற ஜவ்வு சேதமடைந்து பெப்டிக் அல்சர் குடல்புண் ஏற்பட காரணமாகிறது.
சரும நோய்கள், அலர்ஜி நோய்கள், ஆஸ்துமா போன்ற வியாதிகள் உள்ளவர்களுக்கு மாமிச உணவால் பெருமளவு தொந்தரவு ஏற்படுவதை அறிந்து இயற்கை மருத்துவ நிபுணர்கள் மாமிச உணவைத் தவிர்க்கும்படி பரிந்துரை செய்கின்றனர்.
அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை.
அசைவ உணவுகளில் புரதம் இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை, இதனால் சிறுநீரக பாதிப்பு, கால்சியம் குறைபாடு, ஜீரண சக்தி குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன.
உணவில் காய்கறிகளை அதிகம் சேர்க்கும்போது, 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் செரித்துவிடும். ஆனால், அசைவு உணவு செரிமானம் அடைய சுமார் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் வரை ஆகும்.
எனவே, அசைவ உணவுகளை இரவு வேளையில் சாப்பிடக் கூடாது. செரிமானப் பிரச்னையால் பித்தப்பையில் கல் உருவாகும்.
சில ஆண்கள் மது அருந்திவிட்டு, அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். இதனால், உடலில் கொழுப்பு சேர்ந்து, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மேலும் பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு. குடலிலும் அதிக கொழுப்பு தங்கி, குடலின் இயக்கம் பாதிக்கப்படும். விளைவு, அதிக கோபம், எரிச்சல், நிதானமின்மை என அன்றாட செயல்களில் பாதிப்புகள் ஏற்படலாம்.
அசைவ உணவுகளை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
ஆரோக்கிய குறைபாட்டால் மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் தவிர்க்க அறிவுறுத்தும் முதல் உணவுகளில் இடம்பெறுவது சிக்கன், மட்டன், மாட்டிறைச்சிகள் தான்.
அவ்வாறு இறைச்சியை சாப்பிடுவதை நீங்கள் நிறுத்துவதன் மூலம் உங்கள் உடலில் புதுவித மாற்றங்களை காணலாம்.
1.இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது முதலில் ஏற்படும் மாற்றம் உங்கள் எடை குறைவதுதான். குறைந்தது 3 அல்லது 4 கிலோ வரை எடை குறைய வாய்ப்புள்ளது.
2. சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சைவம் சாப்பிடுபவர்களுக்கு 24% இதய நோய்களின் பாதிப்புகள் குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது.
3. தசைகளின் வலிமைக்கு புரதச்சத்து மிகவும் அவசியம், எனவே இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது, ஆகவே புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. இறைச்சி சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாக இருக்கும், எனவே நீங்கள் இந்த உணவை தவிர்ப்பதன் மூலம் உங்கள் உடல் சூடு குறையும்.
5. செரிமானப்பிரச்சனைகள் சரியாகும்.
6.இறைச்சியை கைவிட்டால் அதற்கேற்றவாறு சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.non veg 003

Related posts

பருத்தி பால் தீமைகள்

nathan

மறதி நோய் வராமல் தடுக்கும் வால்நட்

nathan

வெரிகோஸ் வெயின் குணமாக

nathan

அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனையை போக்க இஞ்சியை எவ்வாறு பயன்படுத்துவது?

nathan

சர்க்கரை நோய் வாழ் நாளில் வரக்கூடாதா? தொடர்ந்து படியுங்கள்

nathan

காளான் மசாலா

nathan

ஆரோக்கியம் காக்கும் ஆவாரம்பூ கஷாயத்தின் மருத்துவ பயன்கள்…!!தெரிந்துகொள்வோமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…தொப்பையை கரைக்க மட்டுமல்ல சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த காய் சிறந்தது

nathan

முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

nathan