சமீப காலங்களில் அதிகமாக தாக்கும் புற்று நோய், இரைப்பை புற்று நோய், மார்பகப் புற்று நோய், மற்றும் மலக் குடல் புற்று நோய். இவற்றில் இரைப்பை மற்றும் மலக் குடல் புற்று நோய் வருவதற்கு காரணம் நாள்பட்ட புண்கள், உண்ணும் தவறான உணவுப்பழக்கம் மற்றும் மது அருந்துதல் ஆகியற்றை சொல்லலாம்.
மார்பக புற்று நோய் பெண்களின் மத்தியில் அச்சுறுத்தும் கொடிய நோய். இளம் வயதிலிருந்து வயதானவர்கள் வரை இந்த ஆபத்து உள்ளது. இதற்கு இதுதான் குறிப்பிட்ட காரணம் என்று சொல்ல இயலாது. அதிகமாய் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.
தாய்மை அடைந்த பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் தருவதினால் மார்பக புற்று நோய் வருவதன் அபாயம் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
மார்பக புற்று நோயின் அறிகுறிகள் ; மார்பகத்தில் சிறு சிறு உருண்டையான கட்டிகள் வருவது சாதரணமானதுதான். மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் சில நாட்கள் வந்து உடனே மறைந்து போய்விடும். ஆனால் அது தொடர்ந்து இருந்து, அந்த கட்டிகள் வளர்ந்து பெரிதாய் இருந்தால் நிச்சயம் பரிசோதிக்க வேண்டும்.
எல்லா கட்டிகளும் புற்று நோய்க்கான அறிகுறி என்றும் சொல்லிவிட முடியாது. மூன்று விதமான கட்டிகள் ஏற்படுகின்றன. அவற்றை நிறைய பரிசோதனைகளிலும், பயாப்ஸி மூலமாகவும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
மார்பகத்தில் வழக்கத்திற்கு மாறாக வலி எரிச்சல் இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டியவை. காம்புகளில் வலி இருந்தால் அல்லது ரத்தம் கசித்தால் அது ஆபத்தானது. இவை புற்று நோயின் அறிகுறிகள்தான். ஆனால் அது மிகவும் அரிதான அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அடுத்ததாக மார்பகத்தில் உள்ள கட்டிகளைத் தொட்டால் அவை உடனடியாக உள்ளே சென்றால் அவை சாதரண கட்டியாக இருக்கக் கூடும். அதனை தொட்டவுடன் உள்ளே போகாமல் இருந்தாலோ, அல்லது குழி விழுவது போலிருந்தாலோ, உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.
மார்பக புற்று நோய்க்கு ரேடியேஷன் பயன் தராது. ஆரம்ப நிலையில் மட்டும்தான் அது கை கொடுக்கும். அறுவையில் மார்பகத்தை எடுத்துவிடுவதுதான் ஒரே வழி. ஆகவே பெண்களே எப்போது எச்சரிக்கையுடன் இருங்கள். மாதம் ஒரு முறை நீங்களே சந்தேகப்படும்படி ஏதாவது கட்டி, வலி இருக்கிறதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பரிசோதிக்க எளிய வழி :
சோப்பை மார்பில் தேய்த்து அதன் பின் கைவிரல்களால் தடவிப்பாருங்கள். இதில் கட்டிகள் இருந்தால் தெளிவாக தெரியும். அது தவிர்த்து, 6 மாதம் ஒருமுறை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். வந்தபின் கவலைப்படுவதை விட, வரும் முன் காப்பது உத்தமம்.