28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1454487783 9111
சைவம்

வெண்டைக்காய் வறுவல்

குழந்தைகளுக்கு பிடித்தவாறு சமைப்பது மிகவும் கஷ்டமான விஷயம். அதிலும் காய்கறிகளை எப்படி அவர்களுக்கு தருவது என்பதுதான் முக்கியம்.

இப்போது அந்த வெண்டைக்காயில் வறுவல் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 1/2 கிலோ
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

வெண்டைக்காயில் நீளவாக்கில் உள்ளவாறு கீறிவிட்டு நடுவில் கலந்து வைத்துள்ள மசலாக்களை நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், வெண்டைக்காய் வறுவல் தயார்.1454487783 9111

Related posts

வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு

nathan

சுவையான புதினா புலாவ்

nathan

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan

கொத்தவரங்காய் பொரியல்

nathan

ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்

nathan

பூண்டு சாதம்

nathan

தக்காளி – உருளைக்கிழங்கு கிரேவி

nathan

சாமை அரிசி தேங்காய் சாதம்

nathan