201610281150454291 Green dal gravy SECVPF
சைவம்

சத்தான பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சைடு டிஷ்ஷாக சத்தான பச்சை பயறு குழம்பு செய்யலாம். அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சத்தான பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பச்சை பயறு – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

செய்முறை :

* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பச்சை பயறை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்கி விசில் போனதும் மசித்து கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சத்தான பச்சை பயறு குழம்பு ரெடி!!!201610281150454291 Green dal gravy SECVPF

Related posts

கசப்பில்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி

nathan

பூரிக்கு சூப்பரான சைடுடிஷ் வடகறி

nathan

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

தேங்காய் சாதம்

nathan

ருசியான சாமை சாம்பார் சாதம்

nathan

சிம்பிளான… காளான் கிரேவி

nathan

கதம்ப சாதம்

nathan

வெந்தய சாதம்

nathan