25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201610281206279766 Diwali Fireworks burst safe procedures and first aid SECVPF
மருத்துவ குறிப்பு

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் முதலுதவி

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பாதுகாப்பான வழிமுறைகளையும், முதலுதவி குறிப்புகளையும் கீழே விரிவாக பார்க்கலாம்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் முதலுதவி
குழந்தைகள் பெரியோர்கள் அனைவரும் விரும்பும் தீபாவளியில் பட்டாசுகளுக்கும் மத்தாப்புகளுக்கும் ஓர் முக்கிய இடம் உண்டு.
அதனாலே தீபாவளி ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான தீபாவளியாக அமைந்திட உங்களுக்கு வழங்கும் சில முக்கியமான ஆலோசனைகள்.

1. முதலில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற பட்டாசுகள்.

2. அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமே பட்டாசுகளை வாங்கவும். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்பவர்களிடமிருந்து வாங்கிய பட்டாசுகள் நீங்கள் பற்ற வைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் பணத்திற்கு வேட்டு வைக்க கூடிய வாய்ப்பு அதிகம். அல்லது எதிர்பாராத நேரத்தில் வெடித்து ஆபத்தையும் ஏற்படுத்திவிடும். சீனப்பட்டாசுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

3. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம் அதன் அட்டைப்பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து அதன்படி பயன்படுத்த வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு பட்டாசினையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம்.

4. தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க்குகள், குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள அல்லது அவை தயாரிக்கப்படும் இடங்களைத்தவிர்த்து குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளிகளில் பட்டாசுகளை பயன்படுத்துவதே நல்லது. ராக்கெட்டுகளை குடியிருப்பு பகுதிகளில் உபயோகிப்பதையும், மாணவர்கள், முதியோர்கள் தங்கியிருக்கும் பகுதிகளை நோக்கி செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும். ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக்கொளுத்துவதும் ஆபத்தானதே.

5. தண்ணீர், இது நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல ஒரு வேளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும் கூட. எனவே ஒரு பக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

6. ஒரு நேரத்தில் ஒரே ஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்த வேண்டும். த்ரில்லிங்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்திற்க்கு காரணமாகலாம்.

7. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானால், ஒரு போதும் அதனை கையில் எடுப்பதற்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்க்கோ முயற்சி செய்யக்கூடாது. அந்த பட்டாசு இரு மடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.

8. குழந்தைகள் தைரியசாலிகள்தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசினையும் தனியே கொளுத்த அனுமதிக்ககூடாது.

9. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்து நிமிடம்வரை பொறுமையாக காத்திருந்து ஒரு பக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசினை நீரினுள் நன்றாக மூழ்க வைத்து செயலிழக்க வைக்க வேண்டும். புஷ்வாணம் எரியவில்லை என்றால் கையில் எடுத்துப்பார்க்ககூடாது. திடீரென்று வெடித்து விபத்தினை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. திரி எரிந்தும் வெடிக்காத வெடிகளை கையில் எடுத்துப்பார்ப்பதோ, மீண்டும் பற்ற வைப்பதோ கூடாது.

10. பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ஸ்டாக் பண்ணி வைப்பது ஆபத்தானது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில் குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்தி வைக்கலாம்.

11. நீங்கள் உபயோகித பட்டாசுகளை ஒருபக்கெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துசிறிது நேரம் கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். மேற்சொன்னவாறு செய்யாமல் அப்படியே குப்பைத்தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

12. பட்டாசுகளை பற்ற வைக்கும் போது மற்ற பட்டாசுகளை அவற்றிற்குரிய பைகளிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொண்டு, உபயோகிக்கும் பட்டாசினை மட்டுமே பற்ற வைக்க வேண்டும். இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்படுத்துவதை தவிர்க்கும்.

13. ஒரு பட்டாசினை பற்றவைக்கும் போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல.

14. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும் விதமாக பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.

15. மிக அதிகமான ஒளியையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது த்ரில்லிங்காக இருக்கலாம். ஆனால் அவை ஆபத்தானவை மட்டுமல்ல. தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.

16. செய்தித்தாள்கள் மூலமாகவும், கடைக்காரரிடம் விசாரிப்பதன் மூலமாகவும் நீங்கள் வாங்கும் பட்டாசு உங்கள் ஊரில் தடை செய்யப்பட்டதா? அதனை நீங்கள் பயன்படுத்தலாமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

17. எரிந்து முடிந்த மத்தாப்பூக்கள் மற்றும் பட்டாசுகளை மற்றவர்கள் மீதும் மிருகங்கள் மீதும் எரிந்து விளையாடுவது மனிதத்தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.

18. குழந்தைகளும் சிறுவர்களும் எந்த சிறிய வகை பட்டாசுகளைக்கூட தன்னிச்சையாகக் கொளுத்துவதற்கு தாராளமாக அனுமதிப்பது தவறு. பெரியவர்கள் அல்லது பெற்றவர்கள் மேற்பார்வையில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிப்பதே சிறந்தது.

19. பட்டாசினை கொளுத்தி விளையாடும் இடத்தில் ஒரே நேரத்தில் ஒரே ஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்துவது அறிவுடைமை.

20. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்துவதற்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாப்பினைப் பயன்படுத்துவதே சிறந்தது.

21. மதுபானம் அருந்திவிட்டு உங்களோடு பட்டாசு கொளுத்தி விளையாட அல்லது உதவி செய்ய யாராவது வந்தால் அவர்களை தவிர்ப்பது உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது.

22. வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும்போது வெடிகளை கொளுத்திப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். அதனால் பெரிய விபத்துக்களை தவிர்க்கலாம்.

23. தரைச் சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துக்களையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்கலாம்.

24. நீளமான மத்தாப்புக்களை வைத்துக் கொண்டே வெடிகளை வெடிக்க வேண்டும். வெடிகளைப் பற்ற வைக்கும் போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது. ஏனெனில் விபத்து ஏற்பட்டால் விபத்துடன் வெடிப்பொருட்கள் முகத்தின் தோல் வழியே உள்ளே சென்று முகத்தில் நிரந்தர கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடலாம்.

25. பட்டாசு வெடிக்கும் குழந்தைகளும் அவர்களுக்கு உதவியாகச் செயல்படும் பெரியவர்களும் கண்டிப்பாக கால்களில் ஷூக்களோ அல்லது செருப்புகளோ அணிந்து கொண்டே பட்டாசுகளைக் கொளுத்தி விளையாட வேண்டும்.

26. வெடிக்காத வெடிகளைத் தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது.

முதல் உதவிக் குறிப்புகள்:-

1. எதிர்பாராதவிதமாக பட்டாசினை நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும் தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. பின்னர் ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிவிட்டு உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

2. வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டு விட்டால் முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியை கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

3. தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பார்னால், பேனா மை, ஜோஷியன் வைலட்… பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவிற்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகத் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படும்.

4. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது காற்றில் பறக்கக்கூடிய ஆடைகளை அணிவது கூடாது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாவாடை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தும்போது எரியும் விளக்கின் நெருப்பு பாவாடையில் பட்டு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். பட்டாசு கொளுத்தும்போது நைலான். பட்டு போன்ற துணிகளை அணியவே கூடாது.

5. ஒருவேளை உங்கள் மீது தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் உருண்டு தீயை அணைக்க முற்பட வேண்டும்.

6. ஒருவேளை நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளில் தீப்பிடித்து விட்டால், ஓடாதீர்கள், அந்த ஆடைகளை தீயை அணைப்பதற்காக உதறாதீர்கள்.

அது தீ மேலும் பரவி ஆபத்தை அதிகரித்து விடும். உடனே தரையில் உருண்டு படுப்பது தான் சிறந்தது.201610281206279766 Diwali Fireworks burst safe procedures and first aid SECVPF

Related posts

இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது…

sangika

மாதவிடாய் நாட்களில் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்???

nathan

சூப்பர் டிப்ஸ்! பெண்களே வெள்ளைபடுதல் குணமாக இதோ அருமையான பாட்டி வைத்தியம்..!

nathan

சூப்பர் டிப்ஸ்! முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இங்க ஒரு நிமிஷம் அழுத்தம் கொடுங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! வாய்வு தொல்லையால் ரொம்ப அவஸ்தைப்படுறீங்களா? இயற்கை வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுனா, முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்!

nathan

இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க

nathan

டெங்குக் காய்ச்சலிலிருந்து நம்மை எளிதாகப் பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் இத படிங்க!…

sangika

மார்பக புற்றுநோய்-

nathan