28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
201610220926125570 how to make Diwali legiyam SECVPF
மருத்துவ குறிப்பு

அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்

தீபாவளிக்கு பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் அஜீரண கோளாறை சரிசெய்யும் லேகியம் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்
தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி (தனியா) – கால் கப்
அரிசி திப்பிலி – 10 கிராம்
கண்டந்திப்பிலி – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
சீரகம் – அரை மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி
மிளகு – ஒரு மேசைக்கரண்டி
உருண்டை வெல்லம் – 100 கிராம்
வெண்ணெய் – 100 கிராம்
தேன் – அரை கப்
ஓமம் – ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு – 4
சித்தரத்தை – 10 கிராம்

செய்முறை :

* அரிசி திப்பிலி, கண்டந்திப்பிலி, சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும்.

* வெறும் வாணலியில் வெண்ணெய், வெல்லம், தேன் இவற்றை தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். வறுபட்டவுடன் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். ஆறியதும் ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

* நன்றாக ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.

* வாணலியில் வெண்ணெயை போட்டு உருக விட்டு பின்னர் அதை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* வெண்ணெய் உருக்கிய அதே பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி 3 நிமிடம் வாசனை போகும் வரை வதக்கவும்.

* பிறகு அதில் வெல்லத்தை நசுக்கி அதில் போட்டு வெல்லம் கரைந்து லேகியத்துடன் சேரும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

* இதைப் போல 20 நிமிடம் கிளறவும். கிளறும் போது கெட்டியானால் மேலே நெய்யை ஊற்றி விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும் போது நெய் மேலே மிதக்கும் பதம் வந்ததும் இறக்கி வைத்து விடவும்.

* ஆறியதும் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து அதனுடன் தேனை சேர்த்து கிளறி பரிமாறவும்.

* தீபாவளி அன்று பெருமாலான வீடுகளில் செய்யும் லேகியம் இது. இதை சாப்பிட்டால் அஜீரண கோளாறு இருக்காது.
201610220926125570 how to make Diwali legiyam SECVPF

Related posts

இரண்டாம் முறையாக கர்ப்பமடைந்த விஷயத்தை முதல் குழந்தையிடம் எவ்வாறு பகிர வேண்டும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

இலைகளின் மருத்துவம்

nathan

மனித இனத்தை உலுக்கும் கொடூரமான நோய்கள்

nathan

இரவில் மட்டும் காய்ச்சல் வருவதற்கான காரணங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களுக்கு நீர்க்கட்டிகள் உண்டாக காரணம் என்ன? எப்படி மீளலாம்?

nathan

சத்தான சைடு டிஷ் சன்னா பாலக்

nathan

கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்

nathan

உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றி வீக்கங்களை போக்க நாட்டு வைத்தியங்கள்.இதை படிங்க…

nathan