முடி நீளமாய் இல்லாவிட்டாலும் அடர்த்தியாய் இருந்தாலே போதும். கூந்தலை அழகாய் காட்டும். விதவிதமாக அழகுபடுத்திக் கொள்ளலாம். அப்படி அடர்த்தி இல்லாமல் எலி வாலாய் இருந்தால், தோற்றத்தின் மதிப்பு சற்று குறைந்தது போலத்தான் காட்டும்.
நீங்கள் சிலபேரை சந்தித்திருப்பீர்கள் சிறு வயதில் அடர்த்தியாய் முடி இருந்தாலும், திருமணம் ஆனபின், அவளா நீ என கேட்பது போல் முடிஎல்லாம் கொட்டி அருக்காணியாய் காட்சியளிப்பார்கள்.
சிறு வயதில் புதிய செல்களின் அதிவேக வளர்ச்சி அடையும். மன மற்றும் வேலை அழுத்தம் குறைவாக இருக்கும். ஆகவே அப்போது நன்றாக முடி வளரரும் நேரம்.
ஆனால் வளர வளர பெண்களுக்கு எலும்புகள் மற்றும் தேக வளர்ச்சி தொய்வடைய ஆரம்பிக்கும். அந்த சமயங்களின் முடியின் வளர்ச்சியும் பாதிக்கும். மேலும் போதிய பராமரிப்பிற்கு நேரம் ஒதுக்காமல் கூந்தல் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் வழிவிட்டு, கடைசியில் அடர்த்தியே இல்லாமல் அதனைப் பற்றி கவலைபப்டுவார்கள்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல இளம் வயதிலேயே அதற்கான பராமரிப்பும் கவனிப்பும் இருந்தால் பின்னாளில் இந்த முடிஉதிர்தல் பிரச்சனைகள் ஏற்படாது.
வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளியல், நல்ல தரமான ஷாம்பு அல்லது சீகைக்காய் உபயோகப்படுத்த வேண்டும். ஹேர் கலரிங் எல்லாம் தூரப்போட்டுவிட்டு, நல்ல இயற்கையான கண்டிஷனரை பயன்படுத்தினாலே முடி அடர்த்தியாய் வளரும். அப்படியான ஒரு எளிய டிப்ஸ்தான் இது.
தேவையானவை : விளக்கெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் முட்டையின் மஞ்சள் கரு – 2 டேபிள் ஸ்பூன் சோற்றுக் கற்றாழை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
இந்த மூன்றும் கூந்தலில் அற்புதமான விளைவையே ஏற்படுத்தும். இந்த மூன்றிலும் அதிகப்படியான மினரல் விட்டமின் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இவை கூந்தலின் வேர்க்கால்களுக்கு போஷாக்கு அளித்து, ஆரோக்கியமாக வளரத் தூண்டச் செய்கிறது.
விளக்கெண்ணெய் கூந்தலுக்கு குளிர்ச்சி அளிக்கின்றது கருமையாய் அடர்த்தியாய் வளர துணைபுரிகிறது. முட்டையின் மஞ்சள் கரு முடி உதிர்தலை கட்டுப்படுத்தும். கண்டிஷனராக செயல்பட்டு, வெளிப்புற மாசிலிருந்து கூந்தலை பாதுகாக்கிறது.
சோற்றுக் கற்றாழை அருமையான பலன்களை கூந்தலுக்கு தரும். இவைகள் கூந்தலை மென்மையாக்குகிறது. வறட்சியை போக்கி, ஈரப்பதம் அளித்து, பளபளப்பான கூந்தல் பெறச் செய்கிறது.
செய்முறை :
இந்த மூன்றையும் கலந்து, ஸ்கால்ப்பிலும், கூந்தலிலும் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில்,தரமான ஷாம்பு அல்லது, சீகைக்காய் கொண்டு அலசுங்கள். வாரம் இரு முறை செய்யுங்கள். கூந்தல் உதிர்வது நின்று, அடர்த்தியாய் முடி வளர ஆரம்பிக்கும்.