30.1 C
Chennai
Monday, Jul 28, 2025
o STRAIGHT HAIR facebook
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

நேரான முடியை பெறவேண்டுமா?சூப்பரா பலன் தரும்!!

முடி அதிகமாக உதிர ஆரம்பிப்பதுடன் மென்மைத்தன்மையையும் இழக்கிறது. அப்படி முடி உதிர்ந்து, மென்மை இழந்து நேராக்கும் முடியை, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாக, மென்மையாக மாற்றலாம்.

தலைக்கு குளிப்பதற்கு முன் தயிரை முடி மற்றும் மயிர் கால்களில் நன்கு படும் படி தடவ வேண்டும். பிறகு 30 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இதனால் முடியானது நேராகவும், மென்மையாகவும் இருக்கும். மேலும் பொடுகு இருப்பவர்கள், அந்த தயிருடன் சிறிது எலுமிச்சைப்பழ சாற்றை விட்டு தடவினால் பொடுகு போய்விடும்.

வாரத்திற்கு ஒரு முறை ஆயில் மசாஜ் செய்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஆயில் மசாஜை தேங்காய் அல்லது நல்லெண்ணெய்யில் செய்தால் மிகவும் நல்லது. அதுவும் எண்ணெய்யை சூடு படுத்தி செய்தால் அதைவிட நல்லது. நன்கு எண்ணெய் ஊறியதும் சாதாரண நீரில் அலசினால் முடி பட்டுப் போல் மிளிரும்.

முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொண்டு அத்துடன் நல்லெண்ணெய்யை ஊற்றி, அதை முடிகளுக்கு தடவி 20 30 நிமிடம் ஊறவிடவும். பின் ஷாம்பு கொண்டு அலசினால் முடியானது மென்மையாக பட்டுப்போல் காணப்படும்..

அழகு நிலையங்களுக்குச் சென்று முடியை நேராக மாற்றியப் பின் முடி பார்க்க வறண்டு காணப்படும். தலைமுடியை அலசியப் பிறகு, ஒரு மக் தண்ணீரில் சிறிது விளிகர் விட்டு, அந்த தண்ணீரால் முடியை அலசி, பின் சுத்தமான தண்ணீரால் அலசினால் முடி நன்கு மிளிரும்.

தேயிலையும் முடிக்குச்சிறந்த ஒரு நல்ல கண்டிஸ்னர் மற்றும் நிறம் தரக்கூடியவை. சிறிது தேயிலையை தண்ணீரில் போட்டு, அந்த தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, ஆறிய பின் முடியில் தடவவும். பிறகு 15-20 நிமிடம் கழித்து அலசவும். இதனால் முடியானது நேராகவும் கொஞ்சம் கலராகவும் இருக்கும்.

Related posts

ஹேர் ஆயில் தயாரிப்பு :

nathan

கலர் செய்த கூந்தலை பராமரிக்க உதவும் மூன்று சிறந்த வழி!…

nathan

கூந்தல் வளர்க்கும் 10 உணவுகள்

nathan

முடியை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த எளிய மற்றும் உபயோகமான வழிகளே போதுமாம்…!

nathan

மிருதுவான கூந்தல் கிடைக்க உதவும் ரோஜா இதழ் தெரபி

nathan

உங்க கூந்தலை எப்படியெல்லாம் சீவ வேண்டும் தெரியுமா?

nathan

கூந்தலுக்கு ஆரஞ்சு தோல் சிகிச்சை – தெரிந்துகொள்வோமா?

nathan

உங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா? முடி செழித்து வளர 17 ஆயுர்வேத டிப்ஸ்!

nathan

இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்

nathan