29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

படுக்கும் முன் கூந்தலை பராமரிக்கும் வழிமுறைகள்

கூந்தல் நன்கு வளர, படுக்கும் முன் இந்த முறைகளை பின்பற்றி பராமரித்தால் கூந்தல் நன்கு வளரும்.

படுக்கும் முன் கூந்தலை பராமரிக்கும் வழிமுறைகள்
* தினமும் படுக்கும் முன் 5 -10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும்போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்

* படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்யவேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

* வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம். இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம்.

* கூந்தல் நன்கு வளர படுக்கும் முன் கூந்தலை நன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யாது.

* நீண்ட கூந்தலை கொண்டவர்கள் கூந்தலின் முனையை மறக்காமல் துணியால் சுற்றிக்கொண்டு படுக்கலாம். அவ்வாறு செய்வதால் கூந்தலின் முனைகள் சிக்கு அடையாமல், முடிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும். மேலும் கூந்தலின் முனைகள் வெடிக்காமலும் இருக்கும். ஏற்கனவே வெடிப்புகள் இருந்தால், இனிமேல் வெடிப்புகள் வராமல் தடுக்கும்.

Related posts

எண்ணெய் கொண்டு தலை மசாஜ் செய்யும் போது.

nathan

காய்கறி ஹேர் டை பயன்படுத்தினால் இவ்வளவு பலன்களா..?!

nathan

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா விளக்கெண்ணெயை முடிக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா நரை முடி வர நீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் தான் காரணம்!

nathan

இளநரையா?

nathan

முடி வெடிப்பை தடுக்கும் ஹேர் மாஸ்க்

nathan

கூந்தல் அழகுக் குறிப்புகள்

nathan

உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உரோமத்திற்கு வளர்ச்சி.!!

nathan