சூடான இட்லிக்கு தொட்டு கொள்ள சூப்பரான மட்டன் குடல் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான மட்டன் குடல் குழம்பு
தேவையான பொருட்கள் :
ஆட்டு குடல் – 750 கிராம்
வெங்காயம் – 4
தக்காளி – 4
தேங்காய் – ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் )
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா – கொஞ்சம்
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்)
* குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
* அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.
* இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* அடுத்து வேக வைத்த குடலை போடவும்.
* நன்றாக கொதி வரும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் போது கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
* இட்லிக்கு சரியான டிஷ் இந்த மட்டன் குடல் குழம்பு தான்.