25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201610201251254757 When brushing mistakes men SECVPF
மருத்துவ குறிப்பு

பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்

பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள் என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.

பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்
வாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். நாம் தினமும் செய்யும் பழக்கங்களில் ஒன்று தான் பற்களைத் துலக்குவது. ஆனால் நம்மில் பலர், குறிப்பாக ஆண்கள் பற்களைத் துலக்கும் போது நிறைய தவறுகளை செய்வார்கள்.

சொல்லப்போனால் நிறைய ஆண்கள் பற்களைத் துலக்கவே சோம்பேறித்தனப்படுவார்கள். பற்களை சரியாக பராமரிக்காததால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி பார்க்கலாம்.

நீண்ட நாட்களாக ஒரே டூம் பிரஷைப் பயன்படுத்துவது, வாயில் கிருமிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் ஒரு டூத் பிரஷை 2 மாதத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. எனவே அடிக்கடி டூத் பிரஷை மாற்றுங்கள்.

பற்களைத் துலக்காமல் இருப்பதால், வாயில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படாமல் இருந்து, பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே ஒரு முறை பற்களைத் துலக்கினால் 2 நிமிடம் பற்களைத் துலக்க வேண்டும்.

நிறைய ஆண்கள் பற்களைத் துலக்கிவிட்டு, அப்படியே குளியலறையிலேயே டூத் பிரஷை வைப்பார்கள். இப்படி வைத்தால் டூத் பிரஷில் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து, மீண்டும் அதைப் பயன்படுத்தும் போது வாயில் கிருமிகள் நுழைந்து, பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

பற்களைத் துலக்கவே சோம்பேறித்தனப்படும் ஆண்கள் எப்படி நாக்கை சுத்தப்படுத்துவார்கள். ஆனால் இப்படி நாக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால், நாக்கில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

பற்களைத் துலக்கிய உடனேயே நீரால் வாயைக் கொப்பளிப்பதும் தவறான செயல் தான். எனவே பற்களைத் துலக்கிய பின்பு, உடனேயே நீரால் வாயைக் கொப்பளிக்காமல், 15 நிமிடம் கழித்து வாயைக் கொப்பளியுங்கள்.201610201251254757 When brushing mistakes men SECVPF

Related posts

இதய நலம் காக்க எளிய வழிமுறைகள்

nathan

கோபப்படறவங்களுக்கு இந்த ஒரு பழம் கொடுத்தா போதும். அப்டியே கூலாகிடுவாங்க தெரியுமா!தெரிஞ்சிக்கங்க…

nathan

ஹார்மோன் குறைவால் ஏற்படும் நோய்கள்

nathan

பற்களின் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

nathan

வேரிகோஸ் பிரச்சினையா? இதோ அதை தீர்ப்பதற்கான வழிமுறை..!!

nathan

பன்றிகாய்ச்சலிருந்து பாதுகாப்பபை பெற கைமருந்து!…

sangika

மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு

nathan

சூப்பர் டிப்ஸ்! கோழைச்சளியை வெளியேற்றும் சித்தரத்தை.

nathan

தன்ணுணர்வு நோய் என்றால் என்ன? குழந்தைகளுக்கு அறிகுறிகள் என்ன?

nathan