மைதா மாவால் செய்யப்படும் பரோட்டா உடலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. மைதாவால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம்.
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணீர் விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாகுகிறார்கள், அதுவே மைதா.
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம். இந்த ராசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாய் அமைகிறது.
இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinomotto போன்ற உபபொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது.
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல. மைதாவில் நார்சத்து கிடையாது, நார்சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும். இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது.
Europe union, UK, China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேழ்வரகு, கம்பு, சிறுதானிய உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமற்ற பரோட்டாவை புறம் தள்ளுவோம்.