31.1 C
Chennai
Monday, May 20, 2024
ld4337
தலைமுடி சிகிச்சை

கோடையில் கூந்தல் காப்போம்!

1. வெயிலில் எங்கே சென்றாலும் உங்கள் தலைமுடி முழுவதும் மூடும் படியாக தலைக்குத் துணி கட்டிக் கொள்ளுங்கள். இது உங்கள் கூந்தலுக்கு வெயிலின் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தருவதுடன், கூந்தல் தன் ஈரப்பதத்தை இழக்காமலிருக்கவும் உதவும். தொப்பி அணிவதன் மூலம் சூடான காற்றினால் கூந்தல் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். குறிப்பாக அடிக்கடி சிக்காகும் கூந்தலுக்கும் கலரிங் செய்யப்பட்ட கூந்தலுக்கும் இது பாதுகாப்பு தரும்.

2. அடிக்கிற வெயிலுக்கு அள்ளி முடிந்து கொண்டு கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ செல்வோமா என்றுதான் தோன்றும். ஒற்றை முடி உடலில் பட்டால் கூட உறுத்தும். ஆனால், கோடையில் கூந்தலை இறுகக் கட்டிக் கொள்வதோ, பின்னிக் கொள்வதோ கூடாது. தளர்வான ஹேர் ஸ்டைல்களே சிறந்தவை.

3. தினசரி தலைக்குக் குளிப்பதன் மூலம் உங்கள் மண்டைப் பகுதியின் இயற்கையான எண்ணெய் பசை முற்றிலும் நீங்கிவிடும். எனவே, தினமும் தலைக்குக் குளிப்பதைத் தவிர்த்து, கடற்கரை பக்கம் போய் வந்தாலோ, நீச்சலடித்தாலோ உடனே தலையை அலசலாம். கூடியவரையில் கெமிக்கல் கலந்த ஷாம்புவை தவிர்த்து வீட்டிலேயே தயாரித்த மைல்டான ஷாம்புவால் கூந்தலை அலசுவது சிறந்தது.

4. சிலருக்கு எப்போது தலைக்குக் குளித்தாலும் உடனே ட்ரையர் உபயோகித்து காய வைப்பது வழக்கம். வெயில் காலத்தில் ஏற்கனவே அதிக சூட்டை சந்திக்கிற கூந்தலுக்கு செயற்கையாகவும் ப்ளோ ட்ரையர் மூலம் சூட்டைத் தர வேண்டாம். அதே போல கூந்தலை அயர்ன் செய்வதையும் தவிர்க்கவும்.

5. ஒரு பாட்டில் தண்ணீரில், 1 டீஸ்பூன் கற்றாழை ஜூஸ் மற்றும் 1 டீஸ்பூன் அவகடோ ஆயில் கலந்த கலவையை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். உங்கள் கூந்தல் ரொம்பவும் வறண்டது போல உணர்ந்தால் இந்தக் கலவையை கூந்தலில் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள்.

6. தலைக்குக் குளிக்கும்போது ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் நீர்க்கக் கரைத்து இயற்கையான கண்டிஷனராக உபயோகிக்கலாம். வாரம் ஒருமுறை உங்கள் கூந்தலுக்கு டீப் கண்டிஷனிங் சிகிச்சை மேற்கொள்ளுங்கள். அது உங்கள் கூந்தலை வறண்டு போகாமலும் பளபளப்புடனும் வைத்திருக்க உதவும்.

7. நீச்சல் பழக்கம் உள்ளவரா? நீச்சலடித்து முடித்து வெளியே வந்ததும் 2 கப் தண்ணீரில் கால் கப் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து கூந்தலை அலசுங்கள். இது நீச்சல் குளத்தின் தண்ணீரால் உங்கள் கூந்தல் பொலிவிழப்பதைத் தவிர்க்கும். இதே சிகிச்சையை நீச்சலுக்கு முன் செய்வதன் மூலம், குளத்துத் தண்ணீரில் உள்ள அதிகப்படியான குளோரின் உங்கள் கூந்தலில் படியாமல் காக்கப்படும்.

8. யுவி பாதுகாப்புடன் இன்று நிறைய ஷாம்புகள் வருகின்றன. ஆனால், அவையெல்லாம் கெமிக்கல் கலந்தவை என்பதால் கூந்தலை பாதிக்கும். எனவே, உங்கள் முகம் மற்றும் உடல் பகுதிகளுக்கு சன் ஸ்கிரீன் தடவி முடித்ததும் அந்தக் கைகளை கழுவாமல் அப்படியே கூந்தலுக்குள் விட்டு எடுப்பது சின்ன அளவில் யுவி கதிர்களிடமிருந்து பாதுகாப்பளிக்கும்.

9. வழக்கம்போல தலைக்கு ஷாம்பு குளியல் எடுக்கவும். பிறகு சம அளவு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் அவகடோ எண்ணெய் கலவையால் (மிகக் குறைந்த அளவு) நுனி முதல் வேர்க்கால் வரை மசாஜ் செய்யவும். (பொதுவாக எண்ணெய் தடவும் போது மேலிருந்து கீழாகத் தடவுவோம். அப்படிச் செய்ய வேண்டாம்) பிறகு தலையை அலசவும். இது உங்கள் கூந்தலுக்கு அற்புதமான ஈரப்பதத்தைக் கொடுக்கும். அதே நேரம் பிசுபிசுப்பின்றியும் வைக்கும்.

10. கூடிய வரையில் வெயில் முடிகிற வரை கெமிக்கல் சிகிச்சைகளைத் தவிர்க்கவும். குறிப்பாக கலரிங் செய்வதைத் தவிர்க்கவும்.

11. கோடைக்காலத்தில் இரவிலும் உங்கள் கூந்தலுக்குப் பாதுகாப்பு அவசியம். வறண்டு, நுனிகள் வெடித்திருக்கும் கூந்தல் பகுதிகளில் லீவ் ஆன் கண்டிஷனரை தடவி, காட்டன் துணியால் கட்டிக் கொண்டு தூங்கவும். காலையில் வறட்சியோ, சிக்கோ இல்லாத, ஈரப்பதமுள்ள கூந்தலுடன் எழுவீர்கள்.

12. ஷாம்புகளில் சேர்க்கப்படுகிற சல்ஃபேட்தான் அதை நுரைக்கச் செய்கிறது. அதுவும், ஷாம்புவில் சேர்க்கப்படுகிற பாரபெனும் கூந்தலுக்கு உகந்தவை அல்ல. இவை இல்லாத ஷாம்புவாக தேர்ந்தெடுங்கள். காலங்காலமாக உபயோகிக்கிற ஷாம்புதான் சிறந்தது என்கிற எண்ணத்தைத் தவிர்த்து உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்புவை தேர்ந்தெடுங்கள்.

உதாரணத்துக்கு சுருட்டையானதும் வறண்டதுமான கூந்தலுக்கு Softening ஷாம்புவும், அதிக எண்ணெய் பசையான கூந்தலுக்கு தினசரி உபயோகத்துக்கானது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஷாம்புவும், கலரிங் அல்லது கெமிக்கல் சிகிச்சை செய்யப்பட்ட கூந்தலுக்கு அமினோ ஆசிட் செறிவூட்டப்பட்ட ஷாம்புவும் உகந்தவை. மிகவும் வறண்ட கூந்தலுக்கு கிளிசரின் மற்றும் கொலாஜன் கலந்த ஷாம்பு சரியானது. ld4337

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு எப்படி குளிப்பது?

nathan

இயற்கை முறையில் சீயக்காய் தூள் வீட்டில் செய்வது எப்படி. தெரிந்துகொள்வோமா?

nathan

பொடுகு தொல்லையை போக்கும் கற்றாழை

nathan

தெரிஞ்சிக்கங்க…இளநரை பிரச்சனையை சுலபமாக போக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

nathan

பொடுகை நீக்க சில டிப்ஸ்…

nathan

இந்த சமையலறை பொருட்களை உங்க முகத்தில் தெரியாமகூட பயன்படுத்தாதீங்க…

nathan

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?

nathan

பொடுகு காரணமாக முடி விழுவதை நிறுத்த இந்த ஓட்ஸ் முடி பேக்கை முயலவும்.

nathan

முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் சூப்பர் மாஸ்க் ரெசிப்பிகள் !!

nathan