23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201610150725449594 born blue children reason SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

நீலநிறத்தில் குழந்தைகள் பிறக்க என்ன காரணம்

நீலநிறத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இருதய வால்வில் பிரச்சினை இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

நீலநிறத்தில் குழந்தைகள் பிறக்க என்ன காரணம்
புதிதாக பூமியில் பிறக்கும் குழந்தைகள் எப்போதுமே அழகானவை தான். ஆனால், சில குழந்தைகள் பிறக்கும்போதே நீலநிறத்தில் பிறக்கின்றன. இதைப் பார்த்ததும் மொத்தக் குடும்பமும் சோகத்தில் மூழ்கிவிடும். இது ஏதோ ஒரு நோயின் அறிகுறி என்று பயத்தில் உறைந்து நிற்கும். இப்படி நீலநிறத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இருதய வால்வில் பிரச்சினை இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மனித உடலின் இருதயத்தில் இயற்கையாகவே நான்கு வால்வுகள் இருக்கின்றன. இவை திசுக்களால் ஆனவை. இந்த வால்வுகள் ஒரே திசையில் மட்டுமே திறந்து மூடும் தன்மை கொண்டவை. இவை சீராக இயங்கினால் இருதயம், நுரையீரல் உட்பட உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தின் பணி ஒரே சீராக இருக்கும்.

ரத்தத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட உறுப்புகள் இருதயமும் நுரையீரலும்தான். இருதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலே இரண்டு, கீழே இரண்டு. இந்த நான்கு அறைகளுக்கும் இடையே ரத்தத்தை வாங்கி மறு அறைக்கு செலுத்துவது நான்கு வால்வுகளின் வேலை. இவற்றில் சுருக்கம், கசிவு, அடைப்பு, ரத்தத்தை தவறான திசையில் செலுத்துதல் என வால்வுகளில் ஏற்படும் கோளாறே மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளை கொண்டுவருகின்றன.

இருதயத்தில் உள்ள நான்கு வால்வுகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரத்யேக வேலை இருக்கிறது. எந்த வால்வு பாதிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்ப பிரச்சினையின் தன்மை மாறுபடும். இருதயத்தின் கீழ் அறையில் இருந்து நுரையீரல் ரத்தக் குழாய்க்கு ரத்தத்தை அனுப்பி வைக்கும் வால்வுக்கு ‘பல்மனரி வால்வு’ என்று பெயர். பிறந்த குழந்தைக்கு இந்த வால்வில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் குழந்தை நீலநிறமாக மாறிவிடும்.

சில குழந்தைகளுக்கு தாயின் கருவறையில் இருக்கும்போதே இந்த பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது. அதனால் குழந்தை பிறக்கும்போதே நீலநிறமாக பிறக்கிறது. இந்த பாதிப்பு தீவிரமாக இல்லாதபோது குழந்தைகள் சாதாரணமாகவே இருக்கும். குழந்தைகளுக்கு 10 வயது ஆகும்போது கூட வெளிப்படக்கூடும்.

இப்படி குழந்தை நீலநிறமாக பிறந்தாலே ‘பல்மனரி’ வால்வில் பிரச்சினை என்று தெரிந்து கொள்ளலாம். இந்த இருதயக் கோளாறால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் நிஜமாக இருக்கிறது.

இந்தக் குறையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறக்கும்போதே மூச்சுத் திணறல் இருக்கும். குழந்தை இருதயத்தின் கீழ் அறையில் இருந்து ஆக்சிஜன் குறைவான ரத்தம் நுரையீரலுக்கு செல்வதே இதற்கு காரணம். பிறவி பல்மனரி வால்வு கோளாறுடன் பிறக்கும் குழந்தை வளர்ந்தால் எடைக் குறைவு, வளர்ச்சியின்மை ஆகிய பிரச்சினைகள் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 201610150725449594 born blue children reason SECVPF

Related posts

கர்ப்பிணிகள் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

சிசேரியன் பிரசவம். பின்தொடரும் பிரச்சனைகள்

nathan

குழந்தை நோய் தொற்றில் இருந்து பாதுக்க

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளக்கூடும் சிக்கல்கள்!!!

nathan

கர்ப்பிணிகளுக்கு மசக்கை

nathan

கர்ப்ப காலமும், குங்குமப்பூவும்

nathan

கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

nathan

தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்

nathan

தொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கியம்!

nathan