28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201610121415140546 Chinese Spicy Sweet and Sour mutton chops SECVPF
அசைவ வகைகள்

சைனீஸ் ஸ்டைல் மட்டன் சாப்ஸ்

வீட்டிலேயே சைனீஸ் ஸ்டைலில் மட்டன் சாப்ஸ் செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சைனீஸ் ஸ்டைல் மட்டன் சாப்ஸ்
தேவையான பொருட்கள் :

ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள் – 10
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க

கிரேவி செய்ய :

வெங்காயம் – 1
குடமிளகாய் – 1
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்

செய்முறை :

* ஒரு வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.

* கிரேவியில் கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம், குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மட்டன் சாப்ஸ், அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து அரைமணி நேரம் ஊறவிடவும்.

* குக்கரில் ஊற வைத்த கறியை போட்டு 5 விசில் போட்டு வேக வைக்கவும். விசில் போனவுடன் அந்த கறியை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

* ஒரு அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் வெங்காயம், குடமிளகாய் போட்டு வதக்கவும்.

* பின்னர் அதில் அஜினமோட்டோ, சோயா சாஸ், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

* கடைசியாக அதில் பொரித்து வைத்துள்ள சாப்ஸையும் சேர்த்து கிரேவி திக்கானதும் இறக்கவும்.201610121415140546 Chinese Spicy Sweet and Sour mutton chops SECVPF

Related posts

எலும்பு குழம்பு

nathan

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

nathan

மஷ்ரூம் ஆம்லெட்

nathan

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

nathan

ருசியான நாட்டு கோழி குருமா

nathan

சிக்கன் பிரட்டல்

nathan

ஸ்பைசியான… இறால் பெப்பர் ப்ரை

nathan

முட்டை மசாலா டோஸ்ட்

nathan

நெத்திலி மீன் அவியல்

nathan