25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
23 1437628976 6floss
மருத்துவ குறிப்பு

பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!!!

நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஐஸ் கிரீமை சாப்பிடும் போதும் அல்லது சூடான காபி போன்றவற்றை சாப்பிடும் போதும் ஒவ்வொருமுறையும் வலியால் அலறுவீர்களா?

ஆம், என்றால் நீங்கள் பல் கூச்சத்தால் பாதிக்கப்பட்டிருகிறீர்கள். இந்த கூர்மையான மற்றும் கடுமையான உணர்ச்சியை அனுபவித்தவர்களைப் பொறுத்தவரை ‘பல் கூச்சம்’ என்பது பாதிப்பு இல்லாத வார்த்தையாக தோன்றினாலும், இதனை சாதாரணமாக விளக்க முடியாது.

பல் கூச்சம்

என்பது ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் உலகில் உள்ள மக்களில் 70% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள் அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஒரு வலி என்று இது குறிப்பிடப்படுகிறது. தீவிர நிலையில் குளிர்ந்த நீர் அருந்தினால் கூட இந்த வலி உண்டாகும்.

பல் கூச்சத்திற்கான முக்கிய காரணம், பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைந்து, கூழ் போன்ற மென்மையான பகுதிகளை வெளிப்படுத்தும். இந்த கூழ், பற்களின் உணர் நரம்புகளைக் கொண்டிருக்கும். இந்த பகுதி வெளிப்படும் போது சூடு, குளிர்ச்சி, இனிப்பு, புளிப்பு போன்ற உணர்ச்சிகள் பல மடங்காக பெருகுவதே மக்கள் திடீரென வலியை வெளிப்படுத்துவதற்கான காரணம்.

ஈறுகள் குறைதல்

தீவிரமான முறையற்ற மற்றும் ஆர்வமாக பல் துலக்குதல் அல்லது வயது மேம்பாடு மூலம் ஏற்படலாம். ஈறுகள் குறையும் போது இனிப்பு, புளிப்பு, சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், பல்லின் வேர் சேதமடையும்.

ஈறு அழற்சி

ஈறு நோய் அல்லது வீக்கத்தால் ஈறுகள் பலவீனமடைகின்றன. பற்களை சுற்றியுள்ள ஈறுகளில் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படும் போது, வேர் மற்றும் நரம்புகளானது வெளியே தெரிவது பல் கூச்சத்தை அதிகரிக்கும்.

விரிசலான பல்

பற்களின் மேலே உள்ள இடைவெளியானது பாக்டீரியாக்களை உள்ளே செல்ல அனுமதிப்பதுடன், அவை வாயின் உள்ளே சென்று பற்களில் தொற்றை ஏற்படுத்துகின்றன. இதற்கு சிகிச்சை அளிக்காத போது, இதுவே பெரிய தலை வலியாக மாறும். இதனால் பல் கூச்சம் ஏற்படும்.

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்

உங்கள் வாய்க்குள் செல்லும் அனைத்துமே முதலில் உங்கள் பற்களைப் பாதிக்கின்றது. அதிக அளவு இனிப்பு மற்றும் ஓட்டும் உணவுகள் (சாக்லேட், மிட்டாய்கள், ஐஸ் – கிரீம்கள் போன்றவை), அமில உள்ளடக்கம் கொண்ட உணவுகள் (ஊறுகாய், ஸ்ட்ராபெர்ரி போன்றவை), கோலா போன்ற காற்றூட்டப்பட்ட பானங்கள் மற்றும் மிகவும் குளிர்ச்சியான மற்றும் சூடான உணவுகள் போன்றவை பற்களில் உள்ள எனாமலின் எண்ணிக்கையை குறைத்து பல் கூச்சத்திற்கு வழிவகுக்கும்.

பல்லைக் கடித்தல்

மக்களில் சிலர் பற்களைக் கடிப்பதை வழக்கமாகவோ அல்லது அறியாமலோ (தூக்கத்தின் போது) கொண்டிருப்பார். இந்த நிலை ப்ரூக்சிசம் என்று அறியப்படுகிறது. இதுவும் பற்களில் உள்ள கடினமான எனாமல் பகுதியை இழக்கச் செய்து பல் கூச்சத்திற்கு வழிவகுக்கும்.

பல் சிகிச்சைகள்

பிளேக் அளவிடுதல் மற்றும் பல் மீண்டும் பொருத்துதல் போன்ற சிகிச்சைகளுக்குப் பின் சில நாட்களிலேயே பற்களில் ஒரு உணர்ச்சி தோன்றும். மேலும் இது பல் கூச்சத்திற்கு இட்டுச் செல்லும்.

பற்பசையுடன் கூடிய கடுமையான டூத் பிரஷ்

பயன்படுத்துதல் இவற்றை பயன்படுத்துவது மரத்தின் மீது உப்பு தாள் கொண்டு தேய்ப்பது போன்றதாகும். இது எனாமலை மெலிதாகவோ அல்லது இல்லாமலோ செய்துவிடுகிறது.

மௌத் வாஷ்ஷை

நீண்ட காலம் பயன்படுத்துதல் சந்தைகளில் கிடைக்கும் மௌத் வாஷ் உங்களை ப்ரெஷ் ஆக வைத்திருக்கும். ஆனால் அதில் உள்ள அமில உள்ளடக்கங்கள் பற்களில் உள்ள எனாமலை பலவீனமடைய செய்யும். இதன் மூலம் பல் கூச்சம் ஏற்படலாம்.

வெண்மையாகும் சிகிச்சைகள்

நாம் அனைவரும் பளிச்சிடும் பிரகாசமான பற்களையே விரும்புவோம். மங்கலான நிறம் கொண்ட நம்மில் சிலர் முத்து போன்ற வெண்மையான பற்களை பெற விலையுர்ந்த சிகிச்சைகளை செய்து கொள்வார்கள். அவை உங்களுக்கு பிரகாசமான புன்னகையை அளித்தாலும் கூட, சொல்ல இயலாத பல சேதங்களை எனாமலுக்கு ஏற்படுத்தும். இதனால் நீங்கள் கண்ணீர் வடிக்க நேரும். எனவே நீங்கள் வெண்மையான பற்களைப் பெற செல்லும் முன், ஒரு பல் மருத்துவருடன் அது ஏற்படுத்தும் சேதம் மற்றும் விளைவுகள் குறித்து கேட்டறிந்து கொள்ளவும்.

வழக்கத்திற்கு மாறான மருத்துவ நிலைகள

் இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் அல்லது புலிமியா ஆகிய நிலைகளால் சில நேரங்களில் வாயில் அமில உள்ளடக்கம் அதிகமாக இருக்கும். இந்த அதிகப்படியான அமில நிலை எனாமலை பாதிப்பதன் மூலம் பல் கூச்சம் ஏற்படலாம்.23 1437628976 6floss

Related posts

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல்

nathan

மெனோபாஸ் எலும்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

nathan

இதை முயன்று பாருங்கள்! பெண்களின் வயிற்று சதை குறைய

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…

nathan

சளித்தொல்லைக்கு மருந்தாகும் தும்பைப்பூ!

nathan

மூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம் பெற !இதை படிங்க…

nathan

உடலில் உள்ள கோர் தசைகளைப் பற்றி சில அடிப்படை விஷயங்கள்!!!

nathan

தம்பதியர் இந்த விஷயங்களை பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…

nathan

மூட்டு வாதம் போக்கும், வாய்ப்புண் ஆற்றும், அம்மை நோய் தீர்க்கும்… காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!

nathan