28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201610110745514771 thinai somasi recipe SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான ஸ்நாக்ஸ் தினையரிசி சோமாசி

இனிப்பு விரும்பி சாப்பிடுபவர்களுக்கான தினையரிசி சோமாசியை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.

சூப்பரான ஸ்நாக்ஸ் தினையரிசி சோமாசி
தேவையான பொருட்கள் :

தினையரிசி- 200 கிராம்,
மைதாமாவு – 200 கிராம,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – 1 சிட்டிகை

பூரணத்திற்கு :

நாட்டுச்சர்க்கரை – ½ கப்,
கசகசா -1 ஸ்பூன்,
உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய்த்தூள், கொப்பரைத்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்.
சிறிதளவு பச்சை கற்பூரம்.

செய்முறை :

* திணையரிசியை வறுத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் அதனுடன் நாட்டுச்சர்க்கரையை கலந்து சிறிதளவு ஏலக்காய் பொடியை தூவி பிசைந்துகொள்ளவேண்டும்.

* முந்திரி, திராட்சையை தனியாக நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* பின் அதை திணையரிசி நாட்டுச்சர்க்கரை கலவையில் சேர்த்து பிசைந்து அதனுடன் கொப்பரைத்துருவலையும் சேர்த்துக்கொண்டால் பூரணம் ரெடி.

* மைதாமாவில் சிறிதளவு உப்பு, கசகசா, நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்திற்கு பிசைந்துகொண்டு, அதை சிறிய உருண்டைகளாக்கி பின் அதை தட்டையாக ஒரு அப்பளம் போல் தட்டி அதன் நடுவே செய்துவைத்திருக்கும் பூரணத்தை கொஞ்சம்போல வைத்து ஓரங்களை மடித்து மூடிவிடவேண்டும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் செய்து வைத்துள்ள சோமாசிகளை காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் திணையரிசி சோமாசி தயார். 201610110745514771 thinai somasi recipe SECVPF

Related posts

கோதுமை – கேழ்வரகு உருண்டை

nathan

30 வகை கறுப்பு – சிவப்பு (அரிசி) ரெசிபி tamil recipes

nathan

சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை

nathan

சுவையான மீன் கட்லெட்

nathan

அரிசி வடை

nathan

சோயா தட்டை

nathan

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

சிதம்பரம் கொத்சு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா

nathan