25.8 C
Chennai
Monday, Jan 13, 2025
7 18 1466238262
சரும பராமரிப்பு

பேபி ஆயில் சருமத்தில் செய்யும் அழகு மேஜிக் எப்படியென்று பாருங்கள் !!

பேபி ஆயிலால் குழந்தைகளுக்கு மட்டும்தான் மசாஜ் செய்யலாம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. பேபி ஆயிலை பெண்களுக்கு அழகுபடுத்தவும் உபயோகப்படுத்தலாம்.

பேபி ஆயிலில் விட்டமின் ஈ நிறைய உள்ளது. குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருப்பதால், அதில் கெமிக்கல் சேர்க்கமாட்டார்கள்.

மிகக் குறைந்த அளவே அமிலத் தன்மை இருக்கும். ஆகவே உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நிறைய நன்மைகளை சேர்க்கும். உங்களைஅழகுபடுத்திக் கொள்ள நிறைய வழிகளில் உதவுகிறது.

நல்ல தரமான பேபி எண்ணெயை வாங்குங்கள். அவைகளைக் கொண்டு எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என பார்க்கலாம்.

உடலுக்கு மசாஜ் : பேபி ஆயிலில் விட்டமின் ஈ அதிகம் இருப்பதால் அவை சருமத்திலுள்ள சுருக்கங்களை போக்கும். தினமும் பேபி ஆயிலை உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளியுங்கள். சுருக்கங்கள் போக்கி, உடல் மின்னும்.

மேக்கப் அகற்ற : மேக்கப்பை அகற்ற மிக எளிய வழி பேபி ஆயிலை உபயோகப்படுத்துவதுதான். மற்ற எண்ணெய்கள் அதிக அடர்த்தி இருக்கும். மேக்கப் போனாலும், எண்ணைய் பிசுசுப்பு போகாது. ஆனால் பேபி ஆயில் பிசுபிசுப்பற்றது. இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவினால் மேக்கப் அகன்று, சருமமும் பிசுபிசுப்பின்றி இருக்கும்.

வாக்ஸ் செய்த பிறகு உபயோகிக்கலாம் : வேக்ஸிங் செய்த பின் கை கால்களில் எரிச்சல் அரிப்பு ஏற்படுகின்றதா அப்படியென்றால் பேபி ஆயில் பெஸ்ட் சாய்ஸ். இது சருமத்தில் வாக்ஸிங்கினால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு இதம் தந்து, ஈரப்பதம் அளிக்கிறது. எரிச்சல் அரிப்பு மறைந்துவிடும்.

கருவளையம் இருக்கிறதா? தினமும் இரவு தூங்குவதற்கு முன் கண்களுக்கு அடியில் பேபி ஆயிலில் மசாஜ் செய்து தூங்குங்கள். விட்டமின் ஈ போதிய அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளதால், கண்களில் உள்ள சுருக்கத்தை போக்கிவிடும். கருவளையத்தை மறையச் செய்துவிடும்.

உதடு சிவக்க : பேபி ஆயிலில் சிறிது சர்க்கரை, எலுமிச்சை சாறு அகியவற்றை கலந்து, உதட்டில் தினந்தோறும் பூசி வாருங்கள். உதட்டில் லிப்ஸ்டிக்கால் படிந்த கருமை போய், சிவப்பாய் அழகான உதடுகளாய் மாறும்.

வெடிப்பு மறைய : தினம் இரவு பேபி ஆயிலை கால்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். தூங்குவதற்கு முன் சாக்ஸ் அணிந்து படுக்கச் செல்லுங்கள். வெடிப்பு மறைந்து பாதம் அழகாய் இருக்கும்.

பிரசவ தழும்பு மறைய : பிரசவத்திற்கு முன்னும் பின்னும் வயிற்றில் ஏற்படும் தழும்பினை தவிர்க்கமுடியாததுதான். அதனை மறையச் செய்ய விட்டமின் ஈ சத்துக்கள் தேவை. அவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

புதிய செல்களையும் உருவாக்கும். இதனால் வேகமாய் பிரசவ தழும்புகள் மறையும். தினமும் பேபி ஆயிலை வயிற்றுப்பகுதியில் தடவி வர தழும்பு மறைந்து விடும். முயன்று பாருங்கள்.

7 18 1466238262

Related posts

அழகு குறிப்புகள்:சரும பாதிப்பை தடுக்க…

nathan

பெண்களின் சருமத்தை அழகூட்டும் இயற்கை பொருட்கள்

nathan

பளபளப்பான சருமம் வேண்டுமா?

nathan

கருமைநிறம் தோன்றும் உடலின் மறைவான இடங்களை சரிசெய்யும் வழிமுறைகளைக் காணலாம்.

nathan

வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்!

sangika

பியூட்டி – நைட் க்ரீம்

nathan

மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பை நீக்க சில இயற்கை வழிகள்!!!

nathan

கழுத்தைப் பராமரிக்க

nathan

ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

nathan