நாம் சமையல் அறையில் உபயோகிக்கும் மளிகைப் பொருட்களில், 50 சதவிகிதத்துக்கும் மேல் கலப்படம் சேர்ந்த பொருட்களே!
மளிகைப் பொருட்களின் கலப்படத்தை சில எளிய வழிகள் மூலம் அறியலாம்!
டீ தூள் :
கலப்படம்: டீ வைத்த பிறகு ஃபில்டரில் இருந்து மீதமாகும் கசடுகளை 20, 30 கிலோ வரை சேகரித்து வைத்திருந்து அதை உலர்த்தி,
அதில் சிறிதளவு நல்ல டீ தூளினை சேர்த்து, டார்டாரின் (tartarin) என்கிற கெமிக்கலையும் கலந்து இறுதியில் பாக்கெட் செய்து
விற்கப்படுகிறது.
கண்டறிதல்: வெள்ளை பேப்பரில் சிறிது டீத்தூளை வைத்து தண்ணீரை விட்டால், பேப்பர் நிறம் மாறும். பொதுவாக சுடுநீரில்தான்
டீத்தூளின் நிறம் மாறும். குளிர் நீரிலேயே நிறம் மாறி னால், உஷார்.
மிளகு .:
கலப்படம்: மிளகில் எடை அதிகரிப்புக்காக பப்பாளி விதை சேர்க்கப்படுகிறது. பழைய ஸ்டாக் மிளகைப் பளபளப்பாக்கி ஃப்ரெஷ் ஷாகக்
காட்ட, இப்போது மினரல் ஆயிலும் கலக்கப்படுகிறது.
கண்டறிதல்: டிஷ்யூ பேப்பரில் மிளகை வைத்தால், பேப்பரில் எண்ணெய் ஒட்டும். தண்ணீரில் மிளகைப் போட்டால் எண்ணெய்
மிதக்கும். மிளகில் உள்ள எண்ணெய் வாசனையை வைத்தும், கலப்படத்தைக் கண்டுபிடிக்கலாம்.