28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
201610050908282853 Tips for safe use cylinders SECVPF
ஆரோக்கிய உணவு

பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்

பெண்கள் எப்படி சமையல் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்
இந்த காலத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். சிலிண்டரின் பாதுகாப்பு முறைகள் பற்றி தெரியாமல் நிறைய பேர்கள் இருப்பதால், சிலிண்டரினால் ஏற்படும் பாதிப்புகளோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சமைப்பவர்களின் கவனக் குறைவுகள். எனவே வீட்டில் நாம் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்தும் போது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும், விபத்துக்கள் ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது என்பது பற்றி அனைவரும் கட்டாயமாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

சிலிண்டரை பயன்படுத்தும் முறைகள்

* சிலிண்டர் முதலில் வாங்கியதும், ரப்பர் டியூப் சிலிண்டர் வால்வின் உட்புறத்தில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

* சிலிண்டரை காற்றோட்டமான பகுதியில், உயரம் சமமான பகுதியின் தரையில் செங்குத்தாக வைக்க வேண்டும்.

* வெப்பம் மிகுந்த பொருட்கள் மற்றும் விரைவில் தீப்பற்றும் பொருட்களான எண்ணெய்களை சிலிண்டரின் அருகில் வைக்க கூடாது.

* சிலிண்டரில் கசிவுகள் ஏற்படுவது போல தென்பட்டால், உடனே சோப்பு நீரினைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.

* சமையல் முடிந்தவுடன், எப்போதும் சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பான மூடியை கவனமாக மூடி வைக்க வேண்டும்.

* பிரிட்ஜ் போன்ற மின்சாதனப் பொருட்களை சமையல் அறைக்குள் வைக்க கூடாது. ஏனெனில் மின்சாதனப் பொருட்களால் ஏற்படும் மின் அழுத்தத்தின் ஏற்றத் தாழ்வுகள் கியாஸில் கசிவை ஏற்படுத்துகிறது.

* கியாஸ் டியூப்பில் விரிசல்கள் ஏற்படுகிறதா என்பதை பரிசோதித்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்றி விட வேண்டும்.

* திடீரென கியாஸ் கசிவுகள் ஏற்பட்டால், சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூடிவிட்டு, அந்த அறையில் மின் சுவிட்சுகள் மற்றும் சாதனங்களை இயக்காமல் நமது வீட்டின் வெளிப்புறம் உள்ள மின் இணைப்பு சப்ளைகளை துண்டித்து விட வேண்டும்.201610050908282853 Tips for safe use cylinders SECVPF

Related posts

உங்களுக்கு தெரியுமா இவர்கள் வாழைப்பழத்தை தொட்டு கூட பார்க்க கூடாதாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் சிறிது பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சுவையான கோதுமை புட்டு

nathan

பச்சை பூண்டு தரும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

nathan

ரம்ஜான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்ய தெரியுமா…?

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான பாகற்காய் ஜூஸ்

nathan

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

nathan

ஆரோக்கியத்திற்கு சிறந்த சில மதுபானங்கள் – அட, மெய்யாலுமே தாம்பா!!!

nathan

தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

nathan