30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
201610040804322557 Women in developing ways SECVPF
மருத்துவ குறிப்பு

மகளிர் மேம்பாட்டுக்கான வழிகள்

கிராமப் புறத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உலகத்தரத்திற்கு நிகரான கல்வி, தொழில் பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

மகளிர் மேம்பாட்டுக்கான வழிகள்
கிராமப்புற பெண்களுக்கு சமூக நியாயம் மற்றும் ஆண்களுக்கு இணையான சமன்பாட்டினை உருவாக்க வேண்டுமென்பது, மத்திய, மாநில அரசுகளின் சமூக நலத்திட்டங்களின் அடிப்படைக் குறிக்கோள்களுள் ஒன்றாக இருக்கிறது. இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, சமூக பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு மற்றும் சுயசார்பினை அதிகரிக்கும் வழிமுறைகளும், இத்திட்ட செயலாக்கத்தின் அனைத்து மட்டங்களிலும், முறையாக தேவைப்படுகிறது.

குறிப்பாக கிராமப் புறத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உலகத்தரத்திற்கு நிகரான கல்வி, தொழில் பயிற்சி, கணினிக்கல்வி, அறிவுசார்ந்த பயிற்சிகள், தகவல் பரிமாறுதலுக்கான வாய்ப்பு மற்றும் அது தொடர்பான வலைத்தளம், மேலும் ஆளுமை வளர்ச்சியுடன் இணைந்த தனிப்பட்ட முறையிலான முன்னேற்றம் ஆகியவை தொடர்பான இலவச கல்வி முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.

சுகாதாரப்பணி :

நடமாடும் மருத்துவமனைகள், நவீன ஆரம்ப சுகாதார மருத்துவ சாதனங்களைக் கொண்டு செயல்படவேண்டும். அப்போதுதான் கிராம சமுதாயத்தின் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெருமளவு மேம்பாடு அடையும்.

பொருளாதார மேம்பாடு :

கைவினை பொருட்கள் தயாரிப்பு வர்த்தகம் ஆகியவையும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக் கப்பட்ட கிராமப் புறப்பெண்களுக்கு தொழில்முறைக்கல்வி வழங்குவதனால் அவர்களின் இயல்பான தனித் துவம் வாய்ந்த படைப்புத்திறன் அழிந்துவிடாமல் ஊட்டி வளர்க்கப்படும். மேலும் அவர்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய வகை செய்கிறது. மேலும் கிராமப்புற இந்தியாவின் வளமான பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் :

சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளில் இளம்பெண்கள் மற்றும் மகளிருக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டு சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கான பதில் நடவடிக்கைகளில், அவர்களை முழு வீச்சில் ஈடுபடச்செய்யவேண்டும். எனவே நம் பூமியின் வளங்கள் பாதுகாக்கப்படுவதில் அவர்களுக்கு இருக்கும் முக்கியப்பங்கு குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதில் வெற்றி பெறலாம். 201610040804322557 Women in developing ways SECVPF

Related posts

உங்க கருப்பை பிரச்சனைகளை குணப்படுத்தும் தும்பை !சூப்பர் டிப்ஸ்..

nathan

சளியை விரட்டும் துளசி

nathan

தினமும் காலையில் இதனை ஊறவைத்து சாப்பிடுவது ஆண்களின் மலட்டுதன்மையை போக்குமாம்…

nathan

மாரடைப்பும்… 50 வயதை கடந்த பெண்களும்.!தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அது என்ன மறைமுக மன அழுத்தம்? அதை எப்படி கண்டுபிடிப்பது?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! இரத்த அழுத்தத்தை பராமரிக்க 5 சிறந்த வீட்டு வைத்தியம்..!!!

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு கால் வலிக்கான காரணங்கள்!

nathan

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுருள்பாசி

nathan

உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா?

nathan