சேப்பங்கிழங்கு ஒரு வகை பசைத்தன்மை உடைய ஒரு கிழங்கு வகையாகும். இதை சமைத்தால் குழ குழப்பாக இருக்கும். இந்த கிழங்கை ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு சிலர் விரும்பமாட்டார்கள் சேப்பங்கிழங்கை தோலுடன் கழவி வேக வைத்து பிறகு தோலை எடுத்து விடவேண்டும். இதை பெரிய நெல்லிக்காய் அளவாக நறுக்கிப் போட்டு சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, புரதம் போன்ற சத்துப்பொருள்கள் உள்ளன. சேப்பங்கிழங்கை சாப்பிட்டால் நரம்புகளுக்கு நல்ல முறுக்கேறும். மலத்தை இளக்கி வெளியேற்றும். கபத்தை உற்பத்தி செய்யும். அறிவை விருத்தி செய்யும். உடல் உஷ்ணத்தைத் தணித்து சமப்படுத்தும். இதனால் ஜீரண சக்தி குறையும்.
Related posts
Click to comment