28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
sl3905
சிற்றுண்டி வகைகள்

கேழ்வரகு – சிறுதானிய குணுக்கு

என்னென்ன தேவை?

சிறுதானிய மாவு – 3/4 கப்,
கேழ்வரகு மாவு – 1/4 கப்,
பொட்டுக்கடலை மாவு – 1/2 கப் அல்லது 4 டேபிள் ஸ்பூன்,
புதினா, மல்லி தலா – ஒரு கைப்பிடி,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
கருஞ்சீரகம், மிளகு, சீரகப் பொடி தலா – 1 டீஸ்பூன்
அல்லது தேவைக்கு, இஞ்சி-பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவு, சிறுதானிய மாவு, பொட்டுக்கடலை மாவு, சீரகம், பெருங்காயத்தூள், உப்பு, கருஞ்சீரகம், மிளகு, இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். பின் இத்துடன் மல்லியையும் புதினாவையும் சிறிது நீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்து கலவையில் சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சேர்க்கவும். எல்லாவற்றையும் பிசைந்து சிறிது நேரம் வைத்து, பின் எண்ணெயை காய வைத்து, உருண்டைகளாக உருட்டியோ அல்லது கிள்ளிப் போட்டு வெந்ததும் பொரித்து எடுக்கவும். ஜீரணத்திற்கு நல்லது, கரகரப்பாக இருக்கும். மிளகுக்கு பதில் மல்லி, புதினாவுடன் பச்சைமிளகாய் சேர்க்கலாம்sl3905

Related posts

ஹமூஸ்

nathan

இட்லி மஞ்சுரியன்

nathan

வெண்டைக்காய் சிப்ஸ்

nathan

மழைக்கால குட்டி பசியை போக்க பனீர் பஜ்ஜி!…

sangika

சிக்கன் மோஜோ பர்கர்

nathan

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

குழந்தைகளுக்கான கேரமல் பிரை பனானா

nathan

வெங்காய ரவா தோசை செய்முறை, உணவக முறையில் வெங்காய ரவா தோசை செய்முறை

nathan