25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201610010819073768 Coconut water is a natural gift SECVPF
ஆரோக்கிய உணவு

இளநீர் எனும் இயற்கைக் கொடை

இளநீர், குடல் புழுக்களை அழிக்கிறது. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன.

இளநீர் எனும் இயற்கைக் கொடை
நமக்கு இயற்கை அளித்திருக்கும் எண்ணற்ற கொடைகளில் ஒன்று, இளநீர்.

உடல் சூட்டைத் தணிப்பதுடன், அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்தாகவும் இளநீர் உள்ளது.

இளநீர், செரிமான சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தைச் சுத்திகரிக்கும்.

செரிமானக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர், உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரிசெய்கிறது.

இளநீர், குடல் புழுக்களை அழிக்கிறது. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற உதவுகிறது. இளநீரில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித ‘ஜெல்’, கண் நோய்களுக்குச் சிறந்த மருந்தாக உள்ளது.

இளநீரில் சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானதாகும்.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கக்கூடும். ஏதாவது ஆகாரம் உண்டபின்னரே சாப்பிட வேண்டும்.

பேன், பொடுகு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், இளநீரை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் இந்த அவதிகளில் இருந்து தப்பிக்கலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீர் பருகினால் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். 201610010819073768 Coconut water is a natural gift SECVPF

Related posts

மரவள்ளிக்கிழங்கு பெண்களுக்கு நல்லது!

nathan

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்! கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய சில சைவ உணவுகள்!!!

nathan

ஆலு பன்னீர் கோப்தா

nathan

உங்களுக்கு தெரியுமா உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கும் அற்புத பானங்கள்!

nathan

30 ரெசிப்பிகள் – அறுசுவை விருந்து!

nathan

சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை.! இன்றே செய்து பாருங்கள்..!

nathan

உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இதை மென்று தின்றால் ஆண்மை அதிகரிக்குமாம்?

nathan

மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan