கம்பு சிறந்த சத்துக்கள் கொண்ட இது வசதியற்றோருக்கு உதவும் சிறு தானியமாக ஒரு காலத்தில் இருந்தது.
கம்பீரமாக வாழ கம்பு
நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய ஒரு தானியம் கம்பு. சிறந்த சத்துக்கள் கொண்ட இது வசதியற்றோருக்கு உதவும் சிறு தானியமாக ஒரு காலத்தில் இருந்தது. இன்று உடல் நலம் காக்க வேண்டி அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றது.
அதிக நார்சத்து மிகுந்தது என்பது இதன் கூடுதல் சிறப்பு அம்சம்.
இதில் நோய்களை எதிர்க்கும் ரசாயனங்கள் உள்ளன.
* கொழுப்பை குறைக்கின்றது.
* நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கின்றது.
* ஃபோலேட், இரும்பு, மக்னீசியம், காப்பர், ஸிங்க், வைட்டமின் ஈ, பி சத்து பிரிவு, தயமின், ரிபோ ஃளேவன், நியாசின் சத்துக்கள் கொண்டது.
* க்ளூடன் இல்லாதது.
* எளிதில் ஜீரணமாகக் கூடியது.
* கோதுமையினை விட அதிக கலோரி சத்து கொண்டது.
* கம்பு ரொட்டியினையும், தேனையும் உண்பது மூலம் வலிப்பு, தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு தேவையானதாக பரிந்துரைக்கப்படுகின்றது.
* அலர்ஜி தொந்தரவு உடையோருக்கு நல்லது.
* நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.
* ரத்த நாளங்கள் வலுப்படும்.
* மலச்சிக்கல் இராது.
* வயிற்றுப் புண் நன்கு ஆறும்.
* சீக்கிரம் பசியெடுக்காது.
* அசிடிடி தொல்லை இருக்காது.
* சிறு நீரக பாதிப்பு, மூட்டு வலி பாதிப்பு இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
100 கிராம் கம்பில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது தெரியுமா?
கலோரி சத்து – 3.61
மாவு சத்து – 67.5
புரதம் – 11.6
பாஸ்பரஸ் – 2.96 மி.கி.
மக்னீசியம் – 1.37 மி.கி.
பொட்டாசியம் – 3.07 மி.கி.
இரும்பு – 8.0 மி.கி.
கால்சியம் – 42 மி.கி.
நார்சத்து – 11.3 கி
* அதிகமான பித்த நீர் சுரப்பது பித்தப் பையில் கற்களை உருவாக்கும். ஆனால் கம்பு அதிக பித்த நீர் சுரப்பதனை கட்டுப்படுத்துகின்றது.
* கம்பில் உள்ள லிக்னின் எனும் பொருள் புற்று நோய் அபாயத்தை தவிர்ப்பாக செயல்படுகின்றது. அதிலும் பெண்களின் மார்பக புற்று நோயினைத் தவிர்ப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
* திசுக்களை புதுப்பிக்கின்றது.
* எடை குறைய விரும்புபவர்கள் கம்பினை அதிகமாக பயன்படுத்தலாம்.
கம்பினைக் கொண்டு ரொட்டி, காய்கறி ரொட்டி, அடை தோசை, புட்டு என பல வகை உணவுகளை தயாரிக்க முடியும். அரிசிக்குப் பதிலாக அதே செய்முறைகளைக் கொண்டு அநேக வகை உணவுகளை கம்பு கொண்டு உருவாக்க முடியும். அரிசியினை தவிர்த்தால் அநேக நோய்களை தவிர்த்து விட முடியும் என்பதனை உணர்ந்து இச்சிறு தானியங்களை பயன்படுத்துவது நல்லது. கம்பு மாவினை மட்டும் அவ்வப்போது தயாரித்துக் கொள்ளலாம். ஒரு வாரத்திற்கொருமுறை புதிதாய் மாவு தயாரித்துக் கொள்வது நல்லது.