25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201609161029027669 mudakathan keerai adai SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான முடக்கத்தான் கீரை அடை

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய‌ கீரையாகும். இந்த கீரையில் அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான முடக்கத்தான் கீரை அடை
தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – ஒரு கப்,
பச்சரிசி – அரை கப்,
வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்,
கொடியாக இருக்கும் முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடி,
இஞ்சி – சிறு துண்டு,
பெருங்காயத்தூள் – சிறிது,
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 1
உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

* மாவு சிறிது மசியும்போது முடக்கத்தான் கீரையை கழுவி, ஆய்ந்து நறுக்கி மாவுடன் சேர்த்து அரைக்கவும்.

* அரைத்த மாவில் உப்பு, பெருங்காயத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கல்லை மிதமான தீயில் வைத்து மாவை அடையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

* சுவையான சத்தான முடக்கத்தான் கீரை அடை ரெடி.201609161029027669 mudakathan keerai adai SECVPF

Related posts

றுதானிய கார குழிப்பணியாரம்…

nathan

ஸ்வீட் பிரெட் டோஸ்ட்

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா

nathan

முட்டை சென்னா

nathan

மாலை நேர நொறுவை! – பிரெட் போண்டா

nathan

கருணைக்கிழங்கு காரப் பணியாரம்!

nathan

சமோசா செய்வது எப்படி

nathan

கோதுமை பிரட் முட்டை உப்புமா

nathan

அரிசி ரொட்டி

nathan