24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
sl38801
சிற்றுண்டி வகைகள்

தினை சோமாஸ்

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு.

மெல்லிய ரவை – 1/4 கப்,
கோதுமை மாவு – 1/4 கப்,
தினை மாவு – 1/2 கப்,
சூடான எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
நீர், எண்ணெய் – தேவைக்கு.

பூரணத்திற்கு.

துருவிய தேங்காய் வறுத்தது அல்லது ஃப்ரெஷ் கொப்பரை – 1/2 கப்,
கோவா – 1/2 கப்,
ரவை வறுத்தது – 2- 3 டீஸ்பூன், கசகசா- 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – தேவையானது,
உடைத்த முந்திரி, திராட்சை – சிறிது.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை தண்ணீருடன் சேர்த்து பிசைந்து மூடி வைக்கவும். மாவு அதிகம் கெட்டியாகவோ அதிகம் சாஃப்டாகவோ இருக்கக் கூடாது. பூரணத்திற்கு கொடுத்த எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொள்ளவும். இப்போது மேல் மாவில் இருந்து ஒரு சிறு எலுமிச்சை அளவு மாவு எடுத்து உருட்டி, தேய்த்து பூரி பதம் மாதிரி செய்து மத்தியில் 1 பெரிய டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி சோமாஸ் கட்டரில் வெட்டி அல்லது சோமாஸ் அச்சு கொண்டு செய்து, எல்லா சோமாஸ்களையும் ஓரம் பிரியாமல் ஈரம் கொண்டு ஒட்டி வைக்க வேண்டும். இதை காய்ந்த எண்ணெயில் மிதமான தீயில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.. sl3880

Related posts

பாசி பருப்பு இனிப்பு தோசை

nathan

சுவையான பால் கொழுக்கட்டை ரெடி…

sangika

சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா

nathan

வாழைப்பூ வடை

nathan

அவல் ஆப்பம்

nathan

இட்லி

nathan

பீச் மெல்பா

nathan

அவல் வெஜ் புலாவ்

nathan

பூசணி உலர் திராட்சை ரெய்தா

nathan