தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப்
ஓமம் – அரை தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 10 பற்கள்
வெற்றிலை – 1
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை :
* வெற்றிலை, பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி ஓமம், கறிவேப்பிலை, வெங்காயம், வெற்றிலை போன்றவற்றை போட்டு வதக்கவும்
* வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
* கடைசியாக அதில் சாதத்தை கொட்டி நன்றாக கிளறி இறக்கவும்
* சுவையான ஓமம் சாதம் ரெடி.
* இது மழை, குளிர்காலத்திற்கு ஏற்ற மதிய உணவு.

Related posts
Click to comment