27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
7 07 1465288460
ஆண்களுக்கு

ஆண்களே இது உங்களுக்கான சின்ன சின்ன பியூட்டி டிப்ஸ் – படித்து ஃபாலோ பண்ணுங்க!

ஆண்களின் சருமம் பெண்களின் சருமத்தைப் போல மென்மையானது இல்லை. சற்று கடினமானதாகவே இருக்கும். பொதுவாக ஆண்களுக்கு எளிதில் வயதான தோற்றம் வருவதில்லை.

ஆனால் பெண்களுக்கு 30 வயதை கடந்ததுமே மெல்ல எட்டிப் பார்த்து விடும். இதற்கு காரணம் உங்களின் சருமம்தான் உங்களுக்கு வயதான தோற்றம் தருவதை தள்ளிப் போடுகிறது. ஒரு மெல்லிய தாள் எளிதில் கசங்கிவிடும். ஆனால் கடினமான தாள் அவ்வளவு எளிதில் சுருங்காது.

இது நம் சருமத்திற்கும் பொருந்தும். ஆகவே இந்த கடின சருமம்தான் உங்கள் இளமையை காப்பாற்றுகிறது என காலர் தூக்கிக் கொள்ளுங்கள்.

ஆனால், நீங்கள் அதிகமாக வெளியிலேயே இருக்க வேண்டிய சூழ் நிலை இருக்கும். வெய்யிலின் தாக்கம், பெட்ரோல் புகை, சிகரெட் என மிக மாசுபட்ட சூழ் நிலையில்தான் நீங்கள் பெரும்பாலோனோர் இருக்க வேண்டியது இருக்கும்.

இதனால் முகப்பரு, எண்ணெய் சருமம், மேலும் ஷேவ் செய்வதனால் ஏற்படும் கருமை படிந்த உருவம் என உங்கள் தோற்றம் மாறிவிடும். பின் எப்படி அரவிந்த் ஸ்வாமி மாதிரி ஈர்ப்புத் தன்மையுடன் இருப்பது என யோசிக்கிறீர்களா? சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்தால், நீங்களும் அழகனாகிவிடலாம்.

க்ளென்சிங் : இது பெரிய விஷயமில்லை. நீங்கள் அலுவலகத்தில் இருந்தாலும் சரிஅல்லது கல்லூரி சென்றாலும் சரி. தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் முகம் கழுவுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் சரும துவாரங்களில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும், கருமை அகன்று விடும். கெமிக்கல் இல்லாத ஃபேஸ் வாஷ் நீங்கள் உபயோகப்படுத்தலாம். எளிதான கிளென்ஸர் உங்கள் வீட்டில் இருக்கும் பால்தான். பாலில் தேன் கலந்து முகத்தில் பூசி வாருங்கள்.

முகம் பளிச்சென்று களையாக இருக்கும். அழுக்குகள் தங்காது. சருமமும் உயிர் பெறும். இப்படி செய்தால், சருமம் பாதிப்படையாமல் இருக்கும்.

ஸ்கர்ப் – எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு : உங்கள் சருமத்தில் நீங்கள் நிச்சயம் மாற்றத்தை காண வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் ஸ்க்ரப் உபயோகப்படுத்திப் பாருங்கள். இதற்காக நீங்கள் கடைகளுக்கு சென்று க்ரீம் வாங்க வேண்டியது என்றில்லை

சர்க்கரையில் சிறிது தேன் கலந்து முகத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இது அழுக்குகளையும் இறந்த செல்களையும் அகற்றி, முகத்திற்கு ஒரு தேஜஸ் தரும். வாரம் இரு முறை செய்யலாம்.

மாய்ஸ்ரைஸர் -வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு : சிலருக்கு ஷேவ் செய்த பின் உபயோகப்படுத்தும் ஆன்டி செப்டிக் லோஷனால் முகத்தில் கருமை , எரிச்சல் எற்படும்.இதனால் மேலும் முகம் வறட்சி அடைந்து தோற்றப் பொலிவினை கெடுக்கும். இவர்கள் கட்டாயம் மாய்ஸ்ரைஸர் உபயோகிக்க வேண்டும்.

இது சருமத்தில் உண்டாகும் பாதிப்பினை சரிசெய்து எரிச்சலை கட்டுப்படுத்தும். வறட்சியை தடுக்கும். எளிதான மாய்ஸ்ரைஸர் உங்கள் சோற்றுக் கற்றாழையின் சதைப் பகுதியை பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்தில் போடுங்கள். பிறகு பாருங்கள் வித்தியாசத்தை. உங்கள் சருமம் உயிர் பெற்று பொலிவாய் ஜொலிக்கும்.

கண்கள் : நிறைய ஆண்களுக்கு இருக்கும் மைனஸ் கருவளையம். நிறைய நேரம் கண் விழித்து டீவி பார்ப்பது, வேலை செய்வது என இருந்தால், கருவளையம் வந்துவிடும். பெண்களுக்கு கருவளையம் வந்தால் சீக்கிரம் போய் விடும். ஆனால் ஆண்களுக்கு எளிதில் போகாது.

ஆகவே கருவளையம் வராமல் பாதுக்காத்திடுங்கள். அப்படியே வந்துவிட்டால், நிறைய நீர் அருந்த வேண்டும். கண்களை விரித்து, சுருக்கி பயிற்சி செய்யுங்கள். அதேபோல் கண்களை மேலும் கீழும் சுழற்றலாம்.

மேலும் இது போன்று சில பயிற்சிகளை கண்களுக்கு தாருங்கள். இதனால் கண்களை சுற்றி இருக்கும் நரம்புகள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். கருவளையம் மெல்ல மறைந்துவிடும்.

உதடு : நீங்கள் கண்ணாடியில் பார்த்தால் உங்கள் உதடுகளில் மெல்லிய கோடுகளும் சுருக்கங்களும் தெரியும் . இதற்கு காரணம் உதடுகளில் வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகள் கிடையாது. மேலும் ஸ்ட்ரேடம் கார்னியம் என்ற பாதுகாப்பு லேயர் உதட்டில் கிடையாது. ஆனால் இந்த லேயர் நம் உடலில் மற்ற எல்லா சருமத்தின் மேலும் படர்ந்து இருக்கும்.

வயது ஆக ஆக, உதடுகளில் கொலாஜன் உற்பத்தி குறையும். இதனால் உதடு வறண்டு, தளர்ந்து சுருக்கங்கள் வந்து அழகினை கெடுக்கும். பெண்கள் லிப்ஸ்டிக், லிப்லைனர் என போட்டு மறைப்பார்கள். ஆனால் ஆண்களால் அவை எதுவும் உயோகப்படுத்த முடியாது.

ஆனால் தினமும் தூங்குவதற்கு முன் லிப் பாம் பயன்படுத்தலாம். இவை உதடுகளுக்கு ஈரப்பதம் தரும். நேரம் கிடைக்கும்போது, தயிரில் சில சொட்டு எலுமிச்சை சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால், கருமை மறைந்து சிவந்த நிறம் பெறும்.

7 07 1465288460

Related posts

இது ஆண்களுக்கு மட்டுமே….!

nathan

ஆண்களே! இரண்டே நாட்களில் முகத்தில் இருக்கும் பருக்களைப் போக்க வேண்டுமா?

nathan

உள்ளாடை அணிவதில் தினந்தோறும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

nathan

ஆண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய 20 உணவுகள்!,tamil beauty tips for man

nathan

ஆண்களுக்கான அழகு டிப்ஸ் !!

nathan

அதிக நாட்கள் அழகாவும் இளமையாகவும் ஆண்கள் இருக்க கொய்யா பழம்….

sangika

வீட்டிலேயே ஷேவிங் க்ரீம் செய்வது எப்படி?

nathan

ஆண்களின் முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில எளிய ஃபேஸ் ஸ்கரப்கள்!

nathan

ஆண்களுக்கு ஏற்படும் சொட்டையை எப்படி தடுக்கலாம்?

nathan