அழகு குறிப்புகள்ஆண்களுக்கு

ஆண்களுக்கான அழகு டிப்ஸ் !!

men-skincareஅழகு குறிப்புகள் என்றால் பெண்களுக்கு மட்டும் தான் எப்போதும் இருக்கும் ஆண்களுக்கு அதிகம் இருக்காது. நம் வீட்டிலேயே எதாவது நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் எனில் ஆண்கள் 5 நிமிடத்தில் புறப்பட்டு விடுவார்கள் பெண்கள் புறப்பட 50 நிமிடம் ஆகும் அவர்களின் அலங்காரத்துக்கு நேரம் செலவாகும்.

ஆண்களும் தற்போது அழகில் அதிக கவனம் செலுத்துகின்றனர் முக்கியமாக திருமணம் ஆகப்போகும் இளைஞர்கள் இவர்களுக்கான சில டிப்ஸ்.

01-முகம்
சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.

பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம் அலசும் போதும் இந்த பேஸ்டை பயன்படுத்தவும்

பெரும்பாலான ஆண்கள் தங்களை அழகு படுத்தி கொள்வதே இல்லை.அவர்களை பொருத்த வரையில் முக அலங்காரம் என்பது ஷேவ் செய்வதும் மீசையை அழகு படுத்தி கொள்வது மட்டுமே நீங்கள் முகசவரம் செய்து கொள்வது மட்டும் அல்லாமல் பேசியல் செய்து கொள்ளலாம்.முகத்திற்கு க்ரிம் தடவி உங்களை அழகு படுத்தி கொள்ளலாம்.அவ்வாறு முகபள பளப்புடனும் ஜொலிப்புடனும் இருக்கின்ற ஆண்களை தான் பெரும் பாலும் பெண்கள் விரும்புகின்றனர் எனவே கொஞ்சம் முகசவரம் செய்து கொண்டு முகத்தை அழகு படுத்திடுங்கள்

02-முகம் வரட்சியினை போக்க:
கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம்.

ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும். வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

03-உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்
கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.

04-சருமம்
பெண்களை பொறுத்த வரையில் ஆண்கள் முகத்திற்கும் சருமத்திற்கும் கவனம் செலுத்துவதே இல்லை

.பெண்கள் ஆண்மை தன்மையை மட்டும் விரும்புவது இல்லை.அழகிற்கு தான் அதிக முக்கியத்துவம் தருவார்கள்.சில ஆண்களுக்கு முகசுருக்கங்களும் பருக்களும் அவர்கள் அழகையே கெடுத்து விடும்.

நீங்கள் உங்களுக்கான க்ரிம்களை தடவி உங்கள் சருமத்தை அழகு படுத்திடுங்கள். நீங்கள் சருமத்தின் மீது கவனம் செலுத்துங்கள்பின்பு பெண்கள் உங்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள்

05-பற்கள்
முகத்திற்கு புன்னகை சேர்க்கும் விதமாக விளங்குவது பற்கள். அப்பற்களை எவ்வளவு சுத்தமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்.ஆனால் புகைபிடிப்பது காபி டீ பருகுவது என பற்களின் நிறத்தை கெடுத்து கொள்கிறார்கள்

பற்களின் நிறத்தை பளிர்நிற வெண்மைக்கு கொண்மைக்கு கொண்டுவர பல சிகிச்சை முறைகள் வந்து விட்டன.தினமும் இருமுறை பல்துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது.

06-தலைமுடி
கூந்தல் ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்லஆர்வம் காட்டுகிறார்கள்.

கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல. முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.

07-ஆடை மற்றும் அணிகலன்கள்
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆண்கள் ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.

நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது
நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும் சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

இன்னும்  அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகக இருக்கும் ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும்.

எல்லோரிடமும் கல கலப்பாக பேசுங்கள்.நல்ல பேச்சாளன் என்ற பெயரை வாங்குங்கள்.அப்போதுதான் நீங்கள் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.

08-உதடுக்கு
சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.

– See more at: http://www.tamilula.com/lifestyle/59/article/boys-cute-tips-523#sthash.TgbxuZw7.dpuf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button