27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
201609141419333335 onam special ada pradhaman SECVPF
சிற்றுண்டி வகைகள்

ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்

கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் தினமான இன்று ஸ்பெஷல் சமையல் செய்முறைகளை பார்க்கலாம்.

ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்
தேவையான பொருட்கள் :

அரிசி – 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் – 4 டம்ளர்
வெல்லம் – 2 டம்ளர்
ஏலக்காய் தூள் – சுவைக்கு
பால் – 1 டம்ளர்
நெய் – தேவைக்கு
தேங்காய் துண்டுகள் – கைப்பிடியளவு
முந்திரி – தேவையான அளவு
உலர்திராட்சை – 2 ஸ்பூன்

செய்முறை:

* வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

* அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

* வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

* ஒர் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

* அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.

* அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும்.

* நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.

* தித்திப்பான அடை பிரதமன் தயார்201609141419333335 onam special ada pradhaman SECVPF

Related posts

யுகாதி ஸ்பெஷல் தேங்காய் போளி

nathan

பட்டர் கேக்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரி

nathan

சுவையான சத்தான உளுந்து கார புட்டு

nathan

சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

முழு தம் காலிஃப்ளவர்

nathan

கருப்பு உளுந்து மிளகு தோசை

nathan

கொழுக்கட்டை

nathan

மசாலா பராத்தா

nathan