25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201609130910190387 how to make Chocolate kulfi SECVPF
ஐஸ்க்ரீம் வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி

ஐஸ் வகைகளில் ஒன்றான குல்ஃபியை பலருக்கும் செய்யத் தெரியாது. குல்ஃபியில் ஒன்றான சாக்லேட் குல்ஃபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி
தேவையான பொருட்கள் :

பால் – 2 கப்
பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் – 1 கப் (துருவியது)
சர்க்கரை – 1/2 கப்
பிஸ்தா, பாதாம் – சிறிது (நறுக்கியது)

செய்முறை :

* முதலில் ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு அகன்ற அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

* அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

* சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் சாக்லேட்டை போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் அதனை ஒரு பேனில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.

* 1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லேட் குல்ஃபி ரெடி!!!201609130910190387 how to make Chocolate kulfi SECVPF

Related posts

கிட்ஸ் ஐஸ்கிரீம்

nathan

அசல் மாம்பழத்தின் சுவையில் பர்ஃபி செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

மாம்பழ ஐஸ்க்ரீம்

nathan

வெனிலா ஐஸ்கிரீம்

nathan

ஃபிரைடு ஐஸ்கிரீம்

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

காரமல் பனானா ஐஸ்கீரிம்

nathan

வாழைப்பழ ஐஸ்கிரீம்

nathan

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் செய்முறை

nathan