23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pregnent 300x169
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­படும் உயர்­கு­ரு­தி­ய­முக்கம்

கர்ப்­ப­மா­கிய பெண் ஒருவர் 40 வார காலத்­திற்கு கர்ப்­பத்தை தொடர்ந்தும் ஒரு சிசுவைப் பெற்­றெ­டுப்­பது வழமை. இக்­கா­லப்­ப­கு­தியில் அப் பெண் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்கும் சிக்­ கல்­களும் பல. இவற்றால் தாய்க்கும் சிசு­வுக் கும் பல இன்­னல்கள் ஏற்­ப­டு­வது வழக்கம். இவ்­வா­றான ஒரு பிரச்­சி­னை­யா­கவே கர்ப்­ப­கா­லத்­தி­லேற்­படும் உயர்­கு­ரு­தி­ய­முக்­கமும் காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வ­கை­யான உயர்­கு­ரு­தி­ய­முக்கம் கர்ப்­ப­கா­லத்­தி­லேற்­படும் போது தாய்க்கும் சிசு­வுக்கும் எவ்­வ­கை­யான சிக்­கல்கள் பாதிப்­புகள் ஏற்­படும் என்­ப­தனை நீங்கள் அறிந்­தி­ருப்­பது அவ­சியம். அப்­போ­துதான் இதற்கு சிகிச்­சை­ய­ளிக்கும் போது மக்­க­ளதும், பெண்­க­ளதும் ஒத்­து­ழைப்பை முற்­றாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். ஆகையால் இந்தக் கர்ப்­ப­கால உயர் குரு­தி­ய­முக்­கம் பற்­றிய விப­ரங்­களை ஆராய்­வது பொருத்­த­மா­னது.

கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­படும் உயர்­கு­ரு­தி­ய­முக்கம்

பெண் ஒரு­வ­ருக்கு குரு­தி­ய­முக்கம் சாதா­ரண அளவில் இருந்து கர்ப்­பந்­த­ரித்து 5 மாதங்கள் முடி­வ­டைந்த பின்னர் அதிகரிக் ­கு­மாயின் அது உயர்­கு­ரு­தி­ய­முக்கம் என
வரை­ய­றுப்போம். குரு­தி­ய­முக்கம் 140 / 90 MM Hgக்கு மேல் செல்லும் போது அதி­க­ரித்த குரு­தி­ய­முக்கம் என வரை­ய­றுப்போம். இந்த அதி­க­ரித்த குரு­தி­ய­முக்கம் பிர­ச­வத்தின் பின்னர் குறை­வ­டைந்து சாதா­ரண நிலைக்குத் திரும்பும்.

கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­படும் உயர் குரு­தி­ய­முக்­கத்தை அறிதல்

கர்ப்­ப­காலப் பரா­ம­ரிப்­புகள் ஒழுங்­காக ஆரம்ப காலத்தில் மாதம் ஒரு முறையும், பிந்­திய காலத்தில் இரு வாரங்­க­ளுக்கு ஒரு முறையும் மேற்­கொள்­ளப்­படும். இதன் போது வைத்­தியர் உங்­க­ளது குரு­தி­ய­முக்­கத்தை (Blood Pressure) அளப்பார். அத்­து டன் சிறு­நீர்ப்­ப­ரி­சோ­த­னையில் புரதம் உள்­ள­தன்மை அறி­யப்­படும். இவ்­வாறு ஒழுங்­காக குரு­தி­ய­முக்­கத்­தையும் சிறு­நீ­ரையும் பரி­சோ­திக்கும் போது இதற்­கான ஆதா­ரங்­களைக் கண்­ட­றிய முடியும்.

கர்ப்­ப­கா­லத்தில் உயர்­கு­ரு­தி­ய­முக்கம் ஏற்­படும் போது ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புகள்:

கர்ப்­ப­கா­லத்­தி­லேற்­படும் குரு­தி­ய­முக்க அதி­க­ரிப்பால் தாய்க்கும் சிசு­வுக்கும் பாதிப்­புக்கள் ஏற்­படும்.

தாய்க்கும் ஏற்­படும் பாதிப்­பு­க­ளா­வன:

தலை­வலி, வாந்தி, கண்­பார்வை கலங்கல், குரு­தி­ய­முக்க அதி­க­ரிப்­புடன் சிலரில் சிறு ­நீருடன் புர­தமும் வெளி­யே­றத்­தொ­டங்­குதல் (இந்­நிலை சற்றுத் தீவி­ர­மான நிலை­ய­மாக கரு­தப்­படும் Pre – eclampsia) வலிப்பு ஆகி­ய­ன­வாகும்.

சிசு­வுக்கும் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­க­ளா­வன:

சிசு வளர்ச்சி குறைதல், சிசுவின் துடிப்புக் குறை­வ­டைதல் சிசுவின் எடை ­கு­றைதல், சிசு­வுடன் வளரும் நச்­சுக்­கு­டலில் குருதிப் பெருக்கு ஏற்­படல் (Placental Abruption) மற்றும் சிறு­ம­ர­ணங்கள் ஆகும்.

கர்ப்­ப­கா­லத்தில் உயர்­கு­ரு­தி­ய­முக்கம்ஏற்­ப­டு­வ­தற்­கான காரணம்

கர்ப்­பிணி ஒரு­வரி நச்­சுக்­குடல் (Placental) சுரக்கும் பதார்த்­தங்கள் பெண்ணின் குரு­தியில் கலக்கும்போது அவை குருதிக்­கு­ழாய்­களை சுருங்கச்செய்யும் போது இந்­ நிலை ஏற்­படும் என­வே தான் பிர­ச­வத்தின் பின் நச்­சுக்­கு­டலும் வெளி­யே­று­வதால் குரு­தி­ய­முக்கம் சாதா­ரண அள­வுக்குத் திரும்­பு­கி­றது.

இந்­நிலை கூடு­த­லாக ஏற்­படும் பெண்­களின் வகைகள்

35 வய­துக்கு மேல் கர்ப்­பந்­த­ரித்­த­வர்கள், பரம்­ப­ரையில் இவ்­வா­றான பிரச்­சினை ஏற்­பட்­ட­வர்கள் அதா­வது நெருங்­கிய இரத்த உற­வி­னர்­களில் இவ்­வா­றன குரு­தி­ய­முக்க அதி­க­ரிப்பு ஏற்­பட்­ட­வர்கள்.
உடற்­ப­ருமன் அதி­க­மாக உள்ள பெண்கள்.

கடந்த கர்ப்­ப­கா­லத்தில் இவ்­வா­றான பிரச்­சினை எற்­பட்ட பெண்கள்.முதல் தடவை கர்ப்­பந்­த­ரிக்கும் பெண்­களில் குரு­தி­ய­முக்கம் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­புகள் கூடு­த­லாக உள்­ளன.
கர்ப்­பந்­த­ரிக்கும் போது சிறு­நீ­ரக நோயு­டைய­வர்கள்.கர்ப்­பந்­த­ரிக்­கும் ­போது நீரி­ழிவு நோயு­டை­ய­வர்கள். மேற்­கு­றிப்­பிட்ட பெண்­களில் கர்ப்­ப­கா லக் குரு­தி­ய­முக்க அதி­க­ரிப்பு நிலை ஏற்­ப­டு­கின்­றது. கர்ப்­ப­

கா­லத்தில் குரு­தி­ய­முக்கம் அதி­க­ரிப்­ப­தனை கவ­னிக்­காது விடும் போது தாயில் ஏற்­படும் விளை­வுகள்:

சிறு­நீ­ரக செயற்­பாடு குறைதல், சிறுநீர் வெளி­யேற்றம் குறைதல், மூளையில் குரு­திக்­க­சிவு, பாரி­ச­வாதம், ஈரலில் ஏற்­படும் குருதிக் கசிவு, ஈரல் தொழிற்­பா­டுகள் பாதிப்­ப­டைந்து கண்கள் மஞ்சள் ஆகுதல், கால்கள் முகம் கைகள் வீங்­குதல், குருதி உறையாத் தன்­மைக்கு மாறுதல், நுரை­யீ­ரலில் நீர் தேங்­குதல் என பல வழி­களில் சிக்­கல்கள் ஏற்­பட்டு. இறு­தியில் தொடர்ச்­சி­யான வலிப்­புகள் மயக்கம் ஏற்­பட்டு மர­ணங்கள் கூட ஏற்­படும் நிலைகள் கூட உள்­ளன.

கர்ப்­ப­கால உயர்­கு­ரு­தி­ய­முக்­கத்­திற்கு மேற்­கொள்ளும் சிகிச்சை

கர்ப்பக் கால குரு­தி­ய­முக்க அதி­க­ரிப்பு எந்­த­ளவு தீவி­ர­மாக உள்­ளது என்­ப­தனைப் பொறுத்து சிகிச்சை தீர்­மா­னிக்­கப்­படும். அதா­வது குரு­தி­ய­முக்க உயர்வை கண்­ட­றிந்தால் நாம் மேற்­கொண்டு இதனை ஒழுங்­காகக் பார்க்க வேண்டும்.

அத்­துடன் சிறுநீர் இரத்­தப்­ப­ரி­சோ­தனை என்­பன மேற்­கொள்­வதன் மூலம் இந்த நோயின் தாக்­கத்­தையும் உக்­கி­ரத்­தையும் அறிய முடியும். அத்­துடன் ஸ்கான் பரி­சோ­தனை மேற்­கொண்டு சிசுவில் வளர்ச்சி தொடர்­பாக அறிய வேண்டும். அத்­துடன் தேவை ஏற்­படின் பாதிக்­கப்­பட்ட பெண்ணை மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்து மருத்­துவ கண்­கா­ணிப்பில் ஓய்­வாக இருக்க ஆலோ­சனை வழங்­கப்­படும்.

அத்­துடன் குரு­தி­ய­முக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த மாத்­தி­ரை­க­ளையும் வழங்க வேண்டும். குறை­மா­த­மாக இருப்பின் சிசுவின் சுவாச தொகு­தியில் வளர்ச்­சியைத் துரி­தப்­ப­டுத்தும் ஊசிகள் வழங்­கப்­படும்.
இவ்­வாறு சில­வா­ரங்கள் சிகிச்சை வழங்­கப்­பட்­டாலும் பிர­ச­வத்­திற்கு சற்று முற்­கூட்­டியே மேற்­கொள்ளும் போதே இதற்­கான தீர்வு கிடைக்­கின்­றது. அதா­வது இறுதி நேரம் வரை காத்­தி­ருக்­காமல் நாம் பிர­ச­வத்தை மேற்­கொள்வோம்.

இது சாதா­ரண சுகப்­பி­ர­ச­வ­மா­கவோ அல்­லது சிசேரியன் பிரசவமாகவோ மேற்கொள் ளப்படும். பிரசவத்தின் பின் குருதிய முக்கம் குறைவ டைந்து வழமைக்குத்திரும்புகின் றது.
உயர் குருதியமுக்கம் ஏற்படும் போது

தென்படும் நோய் அறிகுறிகள்

உயர் குரு­தி­ய­முக்கம் கர்ப்­ப­கா­லத்தில் உள்ள போது சில­வே­ளை­களில் நோய் அறி­கு­றிகள் இருப்­ப­தில்லை. ஆனால் தலை­வலி, வாந்தி, கை கால்கள் கூடு­த­லாக வீங்­குதல், கண்­பார்­வையில் ஏற்­படும் மாற்­றங்கள், சிறுநீர் குறை­வாக வெளி­யே­றுதல் போன்­றன இருக்­கலாம். இவை காணப்­படின் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.எனவே கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­படும் குரு­தி­ய­முக்க அதி­க­ரிப்பை கவ­னத்­தி­லெ­டுத்து சரி­யான விதத்தில் கையாளும் போது இதன் தாக்கங்களிலிருந்து விடுபடலாம்.pregnent 300x169

Related posts

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

nathan

குங்குமப் பூ பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது…..

sangika

தாய்ப்பாலால் தாய்க்கு நன்மை

nathan

சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும் பிராணாயாமம்

nathan

பிறந்த குழந்தையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்

nathan

கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் தாம்பத்தியத்திற்கு லீவு விடுங்க

nathan

குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது எப்படி கண்டு பிடிப்பது….?

sangika

தெரிஞ்சிக்கங்க… கர்ப்பகாலத்தில் பெண்கள் கொய்யாப் பழம் சாப்பிடலாமா ?

nathan

சாப்பாட்டு விஷயத்தில் கர்ப்பிணிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

nathan