34.7 C
Chennai
Saturday, Jun 22, 2024
kaLaOCC
சைவம்

வெஜிடபிள் மசாலா

என்னென்ன தேவை?

கேரட்- 2 பெரியது
உருளைக்கிழங்கு -2 பெரியது
சவ்சவ்- பாதி
பச்சைப் பட்டாணி – 2கைப்பிடி
நறுக்கிய பீன்ஸ் -1/2கப்
நறுக்கிய கோஸ் -1கப்
காலிப்ளவர் -1/2கப்
பெரிய வெங்காயம் -1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீ ஸ்பூன்
தனியாத்தூள் -3 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீ ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் – 2 டீ ஸ்பூன்
சோம்பு, பட்டை கிராம்பு, ஏலக்காய்- தாளிக்கத் தேவையான அளவு

எப்படி செய்வது?

பெரிய வெங்காயத்தையும் காய்கறிகளையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் திட்டமாக விட்டு மூடி வைக்கவும். வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேகவைத்து மசாலா பதத்தில் எடுத்து கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறலாம். கார போண்டா, பிரட் சாண்ட் விச் செய்யவும் இந்த மசால் ஏற்றது. அதே போல, பூரி, தோசை போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா நன்றாக இருக்கும்.kaLaOCC

Related posts

சுவையான 30 வகை பிரியாணி

nathan

சுவையான புதினா – கொத்தமல்லி சாதம்

nathan

மாங்காய் சாம்பார்

nathan

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

nathan

காலிபிளவர் பொரியல்

nathan

ஆரஞ்சு தோல் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்

nathan

மஷ்ரூம் மசாலா

nathan

சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

nathan