30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
photo
மருத்துவ குறிப்பு

ஞாபகமறதி நோய் ( தொடர்ச்சி)

10.உடல் வளர்ச்சியை மாற்றும் (Metabolic) காரணிகள் -ஈரல் சிறுநீரக செயலிழப்பு
11.அளவுக்கு அதிகமான மது பாவனை
12.குருதிக் கனிமங்களில் மாற்றம்
13.குருதியில் கல்சியம் அதிகரிப்பு
14.உடலில் சில விற்றமின்களின் குறைபாடு (Vitamin B2 Fulati Thiam Niadacin)
15.மூளைச் சேதம்.
பெரும்பாலான மேற்கூறப்பட்டகாரணிகளால்உருவாகும் ஞாபக மறதிக் குறைபாடுகள் மாற்றப்படக்கூடியதாகும்.

உண்மையான ஞாபகமறதி நோயின் வகைகள் (Real Dementia )

1. அல்செய்மர்ஸ்(Alzheimention Dimention)
இவ்வகை நோயானது அண்ணளவாக 60% ஆன ஞாபக மறதி நோய்க்கான காரணமாகும். இந்நோயானது பரம் பரையிலும் கடத்தப்படக்கூடியது. அதை விட எவரும் இந் நோயால் பாதிப்படையக் கூடும். இந்நோயானது மெதுவாக முதிர்ச்சியடைந்து இறுதியில் பாதிக்கப்பட்டவர் சுயநிலை மறந்தவராக எல்லாவகையான நாளாந்த கடமைகளுக்கும் மற்றவர்களில் தங்கியிருப்பவராக மாற்றமடைவார். சில சமயங்களில் இவர்கள் தமது நெருங்கிய உறவினரான மனைவி/கணவன் பிள்ளைகள் போன்றோரைக்கூடஅடை யாளம் காண முடியாதவராய் இருப்பார்கள்.

பொதுவாக இந்நோய் அடையாளம் காணப்பட்டு 7-15 வருடங்கள் வரை ஆயுட்காலம் இருக்கும். பொதுவாக இவர்கள் வேறு நோய் களின் பாதிப்புக்களால் இறப்பார்கள். இந்நோய் காரணமாக அவர்களது ஊட்டச்சத்து,நீர்ச்சத்து.சுகாதாரம், சாதாரண உயிர்வாழ்வதற்கான பொறிமுறைகள்(விழுங்குதல், மலசலம் கழித்தல்) என்பன பாதிப்படைவதால் இவர்கள் இலகுவில் நோய் வாய்ப்படக் கூடியவராக இருப்பர்.

இந்நோயானது விசேட வைத்திய நிபுணரால் (நரம்பியல் நிபுணர்/முதியோர் மனநல வைத்திய நிபுணர்) பரீட்சிக்கப் பட்டு மருந்து வரலாறு (History).ஞாபக சக்தி பரீட்சை (Congitive testing). நரம்பியல் மனோதத்துவ பரீட்சை (Neuro Psychology). இரத்தப்பரிசோதனைகள் ( இவை பொதுவாக நோயாளியைப் பாதிக்கக்கூடிய மற்றைய நோய் களை அடையாளம் காண உதவுகின்றது) பல்வேறு ஸ்கான் பரிசோதனைகள் (CT, MRI, SPECT, PETSCAN) உதவியுடன் இந்நோய் அடையாளம் காணப்படுகின்றது.

இந்நோய் பிடித்தவர்களின் மூளையில் நரம்புக் கலங்கள் (Nerve Cels) படிப்படியாக இறந்து போகின்றன. எனவே மூளையின் அளவு சிறிதாகின்றது. இந்நோயை முற்றாக மாற்றக்கூடிய சிகிச்சை கிடையாது. ஆனால் மூளையிலுள்ள சில இரசாயனப் பொருட்களை அதிகரிப்பதன் மூலம் மூளையின் வினைத்திறனை முடிந்தளவிற்கு அதிகரிக்க மருந்துகள் தற்போது உள்ளன.

இந்த மருந்துகளானது உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை முடிந்தளவு உயர்ந்த நிலையில் இறக்கும் வரை பேணுவதாகும். ஆனால் இது எல்லோரிலும் வெற்றிகரமாக வேலை செய்வது கிடையாது. தற்சமயம் பல்வேறு உலகளாவிய ஆராய்ச்சிகள் இந்த நோயை மையமாக வைத்து மேற் கொள்ளப்படுகின்றன. மேலைத்தேய நாடுகளில் பமிகவும் செலவு நோய் ஞாபக மறதி நோயாகும். உ-ம் பெருமளவு பணம் பாதிக்கப் பட்டவரைப் பராமரிப்பதற்கு செலவிடப்படுகின்றது. காலப் போக்கில் இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக இந்நோயைக் குணப்படுத்தக்கூடிய அல்லது தடுக்கக் கூடிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்படலாம் என்று நம்புவோமாக.

இந்நோய்க்கான மருந்துகள்

  • Acetyll Chaline Esterace Inhibition –

    • Donepezil
    • Galamatmin
    • Rivastigmin
  •  Memantine நோயின் வளர்ச்சிப் படிகள்

    • 1வது படி – சாதாரணம்
    • 2வது படி – மெல்லிய ஞாபக மறதி (Mild Congitive Imperiment)
    • 3வது படி – ஆரம்ப நிலை அல்செய்மர்ஸ்
    • 4வது படி – நடுநிலை அல்செய்மர்ஸ்
    • 5வது படி -நடுநிலை கடுமையான அல்செய்மர்ஸ்
    • 6வது படி – கடை நிலை அல்செய்மர்ஸ்

2. குருதிக் குழாய் அடைப்பு ஞாபக மறதி (Vascular Dementia)

இது இரண்டாவது பொதுவான வகை. சிறிய ரக பக்கவாத நோய்களால் (Tia) ஏற்படும் ஞாபகமறதி இந்த வகையில் அறி குறிகள் அல்செய்மர்ஸ் போலவே இருக்கும். ஆனால் பொதுவாக படிப்படியாக (Step Ladder Pattern) அறிகுறிகள்மோசமடையும். இதற்கு அல்செய்மர்ஸ் மருந்துகளால் பயனில்லை. ஆனால் சாதாரண உயர்குருதி அழுத்த இதய நோய் மாற் றுக்கள்பாரிய பாதிப்புக்களைதடுக்கவல்லன. இந்நோய்நீரிழிவு, உயர்குருதி அமுக்கம், உயர்கொலஸ்ரோல் மற்றும் புகைப் பிடிப்பவர்களை பெரிதும்பாதிக்கும் மேற்கூறியநோய்களைகட்டுப் படுத்தினால் இந்த வகை ஞாபகமறதிநோயைத்தடுக்க முடியும்.

3. பார்க்கின்சன் நோய் சம்பந்தப்பட்ட மறதி நோய் (Dementia In Parkinson’s Disease / Lewy Bodly De mentia)

இந்நோயானது பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர் களை தாக்குகின்றது. இவர்களது ஞாபக மறதி அறிகுறிகளானது நேரத்துக்கு நேரம் வேறுபடும். இவர்கள் சில வேளை களில் மாயத்தோற்றங்களையும் காண்பார்கள். (Visual Hallucination) இந்நோய்க்கு குறிப்பிடத்தகுந்ததாக மருந்துகள் இல்லை. ஆயினும் அல்செய்மர்ஸ் நோய்க்கான மருந்துகள் சில சமயம் அறிகுறிகளை தற்காலிகமாக கட்டுப்படுத்தமுடியும்

4. முன்மூளை ஞாபக மறதி நோய் (Fronto Temporal Dementia)

பரம்பரையாக கடத்தப்படும் இந்நோய் பொதுவாக இளம் வயதினரையும் தாக்கும். இந்நோயில் முக்கியமாக பாதிக் கப்பட்டவரின் குணநலன்களில் மாற்றம் ஏற்படும். இந் நோய்க்கு மருந்து இல்லை. நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் சில மனநோய் மருந்துகள் (Antipsychotic/Anti Depression) இதற்கு உதவக்கூடும்.

5. கண்டிங்டன் மறதி நோய் (Dementia – Huntington Disease)

இதுவும் பரம்பரையாக பரவும் நோய். இந்நோய்க்கும் மருந்து இல்லை.

ஞாபகமறதிநோயாளர்களுக்கு பொதுவாக முற்றாக மாற்றக் கூடிய மருந்துகள் இல்லாவிடினும் நடைமுறையில் எவ்வாறு அந்நோயால் பாதிக்கப்பட்டவரை பராமரிப்பது என்பது முக்கிய மானது. பாதிக்கப்பட்டவரது நெருங்கிய உறவினர்களும் பராமரிப்பாளர்களும் இந்நோயைப் பற்றிபூரணமாக அறிந்தி ருப்பது மிகவும் முக்கியமானது. இந்நோய் முற்றும் போது நோயாளி சுய நினைவு அற்றவராக உணவு உணர் பதை. மலசலம் கழிவதை உணராதவராக இருப்பார். எனவே பராமரிப்பவர் நோயாளியின் இயலாமையை புரிந்து கொண்டு அவரை அன்பாகவும் பக்குவமாகவும் இறுதி வரையில் பராமரிக்க வேண்டும். பொதுவாக நோயாளியின் கணவன் அல்லது மனைவியும் வயதாவதால் நோயா ளியைப் பராமரிக்கும் பொறுப்பு மிகவும் கடுமையானதும் சலிப்புத்தன்மை ஏற்படுத்தக் கூடியதுமாகும். மேலை நாடுகளில் இவ்வகை நோயாளியைப் பராமரிப்பதற்கென தனியான வசதிகள் உள்ளன. (Care Agencies) தனியார் மூலமாகவோ அரசாங்க (SocialService) மூ வழங்கப்படும். ஆனால் இலங்கை போன்றநாடு களில் இச்சேவைகள் இன்னமும்பூரணமாக வளர்ச்சியடைய வில்லை. எனினும் உற்றார் உறவினர்கள் இங்கே முன்வந்து உதவுவதால் மன நோயாளிகளை பராமரிப்பது சிறிது இலகுவானது.

மறதி நோயாளருக்கு நிறை உணவும் நீராகாரங்களும் வேளை தவறாது வழங்கப்பட வேண்டும்.இல்லாவிடில் அவர்களுக்கு பசிப்பது தெரியாததால் ஒன்றுமே கேட்காமல் இருந்து உடல் நலிவடைந்து இறந்து விடுவர்.மறதிநோய் என்பது நேரடியாக கொல்லும் ஒரு நோயல்ல.எனினும் வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவரை சிறிது சிறிதாகக் கொல்லும். மலசல விடயங்களில் கூட பாதிக்கப்பட்டவரை நேர அட்டவணையின் படி மலசலகூடத்திற்குச் செல்லும் படி உற்சாகப்படுத்துவதால் மலசலம் தானாகப் போகும் அசெளகரியங்களைத் தவிர்க்கலாம்.

வெளியில் செல்லும் விசேட incontinenence pads உதவக்கூடும் எனினும் இலங்கை போன்ற வெப்பப் பிரதேசத்தில் இந்த pads இன் உபயோகம் சரும ரோகங்களின் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சில விசேட தைலங்கள் (barrier Cream/sudo Cream) பயன்படுத்தி சருமம் ஈரமாவதைத் தவிர்க்க முடியும்.

பாதிக்கப்பட்டவருடன் சரளமாகக் கதைப்பது, அவர் களைப் பழைய நினைவுகளை மீட்குமாறும் பழங்கதை களை கதைக்குமாறும் உற்சாகப்படுத்துவது.அவர்களால் பாதுகாப்பாகச் செய்யக்கூடிய சில வேலைகளை அவர்க ளாக முன்வந்து செய்ய உற்சாகப்படுத்துவது. அவர்களை கிரமமாக வெளியிடங்களுக்கு குறிப்பாக மற்றவர்களை இலகுவாகச் சந்திக்ககூடிய இடங்களுக்கு (கோவில்கள் விழாக்கள்) அழைத்துச் செல்வது போன்ற நடவடிக்கைகள் அவர்களது மூளையை உற்சாகப்படுத்தி (simulate) நோயின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.

நோயின் ஆரம்பத்தில் மனோதத்துவ உதவிகள் (Psychological Interventions) நோயை எவ்வாறு சமாளிப்பது. அதனைஎவ்வாறு எதிர்கொள்வது என்ற அறிவை நோயாளிக்கு ஊட்டும்.எனினும் நோயின் பிற்பகுதியில் இது பெரிதாக உதவு வது இல்லை. என்னதான் சிகிச்சை அளித்தாலும் நோயின் இறுதிக் காலத்தில் நோயாளி மூளையின் மொத்த செயற்பாட்டையும் இழந்துபடுத்த படுக்கையாகி (Bedfast Stage) விடுவார். இதனால் வேறுபல உப பாதிப்புக்களுக்கும் உள்ளாகி படுக்கைப்புண்,நுரையீரல் அழற்சிசிறுநீரகத் தொகுதிநுண் ணுயிர் பாதிப்புக்களுக்கு உட்பட்டு மரணிக்க நேருகின்றன.

மறதி நோய் வராமல் தவிர்ப்பது எப்படி?

இந்நோய்வருவதைத்தவிர்க்க முடியாது என்றாலும்தாமதப் படுத்த முடியும்.எமது முன்னோர் சொல்லிச் சென்றது போல் ஒழுக்கமானதும் சமச்சீரானதும் (Balanced) ஆரோக்கிய மானதுமான வாழ்க்கை முறையை பொதுவாக எல்லா வகை யான நோய்களையும் எம்மை அண்டவிடாது தடுக்கும்.

பின்வரும் எளியநடைமுறைகளைப் பின்பற்றினால் மறதி நோய் வருவதை முடிந்தளவில் தாமதப்படுத்த முடியும்.

  • உணவில் கொழுப்பு. இனிப்பு, உப்பு மற்றும் செயற்கை உணவுகளைத் தவிர்த்தல்.
  • கூடியளவு மரக்கறி வகைகள், பழங்கள் என்ப வற்றை முடிந்தளவு பச்சையாகவோ அல்லது அவித்தோ உண்ணல்
  • கொழுப்பு குறைந்தபால்(SemiFatMilk) முட்டை கடல் உணவுகளை முடிந்தளவு அன்றாட உண வில் சேர்த்துக் கொள்ளல்.
  • மது, புகைத்தல், போதைவஸ்து பாவனையை முற்றாக நிறுத்தல். சிவப்பு வைன் (Red Wine) சிறிதளவு அருந்திவந்தால் ஞாபக சக்தியை பாதுகாக்க முடியும் என்று ஒரு சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன
  • நாளாந்த உடற்பயிற்சி (Regular Exercise)
  • முடிந்தளவு உடலையும் உள்ளத்தையும் உற்சாகத் தையும் உபயோகமாகவும் வைத்திருத்தல் (Active And Occupied) உ-ம் ஓய்வுபெற்றபின் பல்வேறு பொதுப் பணி களில்ஈடுபடுதல்வேண்டும் ஊர்கோவிலில்பணிவிடைசெய்தல் கூட ஞாபகமறதி நோயை தாமதப்படுத்துவதில்பேருதவி செய்யும்
  • தற்போது உலகளாவியரீதியில் இந்நோயை குணப் படுத்தவோ தடுக்கவோ பல ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அடுத்தடுத்த சந்ததிகளுக்காவது இதனால் நல்ல பயன் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

வைத்திய கலாநிதி ஸ்ரீ.நகுலேஸ்வரன்
முதியோர் மனநல விசேட வைத்திய நிபுணர்,
ஐக்கிய இராச்சியம்.
photo

Related posts

நாம் சாப்பிடும் மருந்துகள் விஷமாகும் அதிர்ச்சி!அப்ப இத படிங்க!

nathan

பாடாய் படுத்தும் ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் தெரியுமா!!

nathan

கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் பொன்னாங்கண்ணி

nathan

பயனுள்ள 10 பாட்டி வைத்தியங்கள்! இதோ உங்களுக்காக!

nathan

பற்களின் மீது உள்ள கறைகள் நீங்க வீட்டு வைத்தியம் –

nathan

உங்கள் எலும்புகள் பலவீனமாகி பெரிய ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

கூன் விழுவதற்கான காரணிகளும் தடுப்பதற்கான பாதுகாப்பு முறைகளும் : படித்து பாருங்கள்

nathan

பீனசத்திர்க்கான சித்த மருந்துகள்

nathan

எட்டு மணி நேரம் வெளிக்காற்றில் எளிதாக வாழும் பன்றிகாய்ச்சல் வைரஸ் -H1 N1.

nathan