25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl3816
சிற்றுண்டி வகைகள்

பனீர் கோஃப்தா

என்னென்ன தேவை?

கோஃப்தாவிற்கு…

உருளைக்கிழங்கு – 2,
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பனீர் – 1/4 கப்,
துருவிய பரங்கிக்காய் – 1/2 கப்,
பச்சை மிளகாய் – 2,
பிரெட் துண்டுகள் – 2,
எண்ணெய் – பொரிப்பதற்கு. குழம்பிற்கு… பூண்டு பற்கள் – 4,
சீரகம் – 1 டீஸ்பூன்,
இஞ்சி – 1 சிறிய துண்டு,
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
தக்காளி – 2, கேரட் துருவல் – 1/4 கப்,
நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேக விடவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பரங்கிக்காய் துருவலை வதக்கவும். ஒரு பாத்திரத்தில் வெந்த உருளை, வதக்கிய பரங்கித் துருவல், உப்பு, மிளகாய்த்தூள், துருவிய பனீர், நறுக்கிய பச்சை மிளகாய், பிரெட் துகள் எல்லாம் சேர்த்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் எண்ணெயில் பொரிக்கவும். கோஃப்தா தயார்.

கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்துநறுக்கிய பூண்டு , நறுக்கிய தக்காளி வதக்கி, மெலிதாக சீவிய இஞ்சி, கேரட் துருவல் எல்லாவற்றையும் தனித்தனியே போட்டு வதக்கி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க விடவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்து வந்ததும் இறக்கி மல்லித்தழை தூவி பொரித்த கோஃப்தாக்களைச் சேர்க்கவும்.

குறிப்பு: கோஃப்தாவில் வெங்காயத்திற்கு பதில் பரங்கித் துருவலும், குழம்பில் ேகரட் துருவலும் சேர்க்கப்பட்டுள்ளது.sl3816

Related posts

தேங்காய்-ரவா புட்டு

nathan

வரகரிசி முறுக்கு செய்வது எப்படி?

nathan

கடலைப் பருப்பு போளி

nathan

பால் அடை பிரதமன்

nathan

அவல் புட்டு

nathan

சூப்பரான முட்டை கொத்து பரோட்டா

nathan

மசால் தோசை

nathan

ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்: தீபாவளி ஸ்பெஷல்!

nathan