நடையும், மெல்லோட்டமும் என்னென்ன நன்மைகளை அளிக்கின்றன என்பதை பார்க்கலாம்.
எளிய பயிற்சிகள்… நிறைய நன்மைகள்
‘வாக்கிங்’ எனப்படும் நடையும், ‘ஜாக்கிங்’ எனப்படும் மெல்லோட்டமும் எளிய உடற்பயிற்சிகள்தான். ஆனால் இவற்றை காலையில் எழுந்து செய்தால் உடலும் மனமும் ஆரோக் கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
நடையும், மெல்லோட்டமும் என்னென்ன நன்மைகளை அளிக்கின்றன என்று தெரியுமா?
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எளிதாக மேற்கொள்ளக்கூடிய நடைப்பயிற்சி, இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.
மேலும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை சீராகத் தரும். உடல் எடையைக் குறைக்கும்.
மறதி நோய் வராமல் காக்கும். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். எலும்புச் சிதைவு நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்) வராமல் தடுக்கும்.
வைட்டமின் டி அளவை உடலில் அதிகரிக்கச் செய்யும். எந்த நோய் ஏற்பட்டாலும் அதன் வீரியத்தைக் குறைக்கும்.
இனி, ‘ஜாக்கிங்’ அதாவது, மெல்லோட்டம் பற்றிப் பார்க்கலாம்.
மெல்லோட்டமானது ஓடுவதைப் போலவும் இல்லாமல், நடப்பதைப் போன்றும் இல்லாமல் மெதுவாக சீராக ஓடும் பயிற்சி ஆகும்.
மெல்லோட்டத்தின் நன்மைகள்…
எலும்புகளை உறுதியாக்கி தசைகளை வலுவடையச் செய்யும். இதயத் துடிப்பைச் சீராக்கும்.
உடல் எடையைச் சீராகப் பராமரிக்க உதவும். உடலெங்கும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உடல் புத்துணர்ச்சி அடையச் செய்யும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். உடலின் வளைந்துகொடுக்கும் தன்மையை மேம்படுத்தும்.
ஆனால், மூட்டு வலி உள்ளவர்கள் மெல்லோட்டப் பயிற்சியை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது சிறந்தது.