24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
201609071055409083 veppam poo rice Veppambu Sadam neem flower rice SECVPF
ஆரோக்கிய உணவு

வேப்பம்பூ சாதம் செய்வது எப்படி?

உடலுக்கு நன்மை தரும், நோய்களை தீர்க்கும் வேப்பம்பூ சாதம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

வேப்பம்பூ சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த சாதம் – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 4,
கறிவேப்பிலை, வேர்க்கடலை – சிறிதளவு,
காய்ந்த வேப்பம்பூ – ஒரு டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடுகு, மஞ்சள்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
புளி – கோலிகுண்டு அளவு,
நெய் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* வாணலியில் நெய் விட்டு, வேப்பம்பூவை வறுத்து எடுக்கவும்.

* உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை மூன்றையும் சிறிதளவு எண்ணெயில் வறுத்து ஆறவைக்கவும். ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

* வடித்த சாதத்தை ஒரு அகன்ற பாத்திரத்தில் போடவும்.

* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள்தூள் சேர்த்து இறக்கி, சாதத்தில் சேர்க்கவும்.

* வறுத்த வேப்பம்பூ, அரைத்த பொடி இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

* உடலுக்கு மிகவும் நல்லது இந்த சாதம். வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது.201609071055409083 veppam poo rice Veppambu Sadam neem flower rice SECVPF

Related posts

வெயிலுக்கு மோர்தான் பெஸ்ட்!

nathan

ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம்

sangika

சூப்பர் டிப்ஸ்! ஆண்மைக்குறைவு குறைபாட்டை சரிசெய்ய கருப்பு கேரட்டை இப்படி பயன்படுத்துங்கள்….

nathan

சூப்பர் டிப்ஸ்!உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது இப்படி செய்தால் சுவை கூடும்..!

nathan

உங்களுக்கு தெரியுமா இதய வால்வுகளில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடுக்கும் நல்லெண்ணெய் !!

nathan

nellikai juice benefits in tamil – நெல்லிக்காய் சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா

nathan

தெரிஞ்சிக்கங்க… இளநீர் குடிச்சிட்டு வழுக்கையை தூக்கி குப்பையில போடுவீங்களா?

nathan

ருசியான சிக்கன் போண்டா செய்ய…!!

nathan