25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
201609070925158855 Urad dal kanji SECVPF
ஆரோக்கிய உணவு

சத்தான சுவையான உளுத்தம் கஞ்சி

உடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவாகக் கொடுக்கக்கூடிய சத்தான உணவு இது.

சத்தான சுவையான உளுத்தம் கஞ்சி
தேவையான பொருட்கள் :

தோலில்லாத வெள்ளை உளுந்து – 100 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
பால் – 1/2 லிட்டர்
பனைவெல்லம் – தேவைக்கேற்ப
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

* பாலை நன்றாகக் காய்ச்சி ஆறவிடவும்.

* உளுத்தம் பருப்பையும், பச்சரிசியையும் நீரில் கழுவி, குக்கரில் வைத்து நன்றாகக் குழைய வேகவைத்துக்கொள்ளவும்.

* விசில் போனவுடன் குக்கரை திறந்து வெந்த பருப்பையும் அரிசியையும் கரண்டியால் நன்கு மசித்துவிட்டு, பாலை அதில் சேர்க்கவும்.

* தேவைக்கேற்ப பனைவெல்லம் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துக் கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* சுவையான உளுத்தம் கஞ்சி தயார்.

* விருப்பப்பட்டால் ஏலக்காய்ப்பொடி சேர்க்கலாம். உளுத்தம்பருப்புக்குப் பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் இதுபோல கஞ்சி செய்யலாம். 201609070925158855 Urad dal kanji SECVPF

Related posts

உடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி

nathan

தெரிஞ்சிக்கங்க…சாப்பிடும்போது புரை ஏறினால் உடனே என்ன செய்ய வேண்டும்?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய முட்டை சாலட்

nathan

உடல் சோர்வை போக்க தினமும் இதை சாப்பிடுங்க !

nathan

பி.பி, சுகர்னு அத்தனையையும் விரட்டி “குட்பை“ சொல்லும் அதிசய பழம்!

nathan

இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை!…

sangika

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு பொரியல்

nathan

இந்த ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மற்றம் என்ன எனத் தெரியுமா ?

nathan

தெரிஞ்சிக்கங்க… கரும்பு சாப்பிடுவதால் நம் உடலுக்குள் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா?

nathan