ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!

yjbbpஉடலிலேயே செரிமான மண்டலம் மிகவும் முக்கியமான உறுப்பு. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக இயங்கும்.

அதிலும் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க… புற்றுநோய் சீக்கிரம் வந்துடும்… அதற்கு செரிமான மண்டலத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்கும் அளவிலான உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி சேர்த்து வந்தால், ஆபத்தான நோய்களான புற்றுநோய், நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மேலும் செரிமான மண்டலமானது சுத்தமாக இருந்தால், அவை மூளை, பாலுறுப்புகள் மற்றும் இதர சுரப்பிகளை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

\
எளிதில் செரிமானம் அடையாமல் தொந்தரவு கொடுக்கும் உணவுகள்!!! சரி, இப்போது அத்தகைய முக்கியமான செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளைப் பார்ப்போமா!!!
தக்காளி தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள லைகோபைன் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

கேரட் கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் 2 கேரட்டை உட்கொண்டு வந்தால், அவை வாழ்நாளில் 10 வருடத்தை அதிகரிக்கும்.

எனவே இதனை உட்கொண்டு வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் இவை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தயிர் தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருப்பதால், அதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து, செரிமானம் சீராக நடைபெறும்.

இளநீர் தினமும் இளநீர் குடித்து வந்தால், உடல் வெப்பமானது தணியும். மேலும் இவை குடல் மற்றும் வயிற்றை திறம்பட செயல்படத் தூண்டும்.

நட்ஸ் தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலமானது சீராக செயல்படும்.

இஞ்சி இஞ்சியின் அற்புதத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எனவே முடிந்த அளவில் தினமும் உணவில் இஞ்சியை தவறாமல் சேர்த்து வாருங்கள். உங்கள் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில் உள்ள கரையக்கூடிய ஆசிட்டுகள் செரிமானம் சீராக செயல்பட உதவும். மேலும் இந்த பழங்களை உட்கொண்டு வந்தால், அவை செரிமானத்தை அதிகரித்து, உடலானது ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ள உதவிப் புரியும்.

Related posts

மனஅமைதி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு!…

sangika

அசிடிட்டி பிரச்சனைக்கு வாழைத்தண்டு மோர்

nathan

உங்களுக்கு தெரியுமா கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்க இந்த இரண்டு பொருட்களே போதும்!

nathan

வெப்பம் தவிர்த்து குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரை

nathan

புதினா சர்பத்

nathan

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தனியா பொடி

nathan

உங்களுக்கு தெரியுமா கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள்…!!

nathan

என்ன  எடை  அழகே!

nathan

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

nathan