28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
ld461112
மருத்துவ குறிப்பு

எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக …

எனது வயது 25 ஆகும். நான் இன்னமும் திருமணம் செய்யவில்லை. எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? இது தொடர்பான ஆலோசனை வழங்கவும்.

நீங்கள் குறிப்பிட்டதைப் போன்ற பிரச்சினை சில திருமணம் செய்யாத பெண்களிலும் காணப்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்களில் (Prolacti) என்ற ஹோர்மோன்சுரப்பு அதிகரித்து மகப்பேற்றின்பின்னர் அவர்களின்மார்பகங்களிலிருந்து பால் சுரப்பதானது. அவர்களின் குழந்தையின்போசாக்கிற்கு மிகவும் இன்றியமையாததாகும். எனினும் திருமணம் செய்யாத பெண்களுக்கும் அவர்களின் முலைக்காம்புகளிலிருந்து சிலவேளைகளில் பால் போன்ற அல்லது வேறு நிறமான திரவம் வெளியேறலாம்.

இவ்வாறான பிரச்சினை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பல விதமான குளிசைகள் இதற்குக் காரணமாக அமைகின்றன. வயிற்றுப்புண் (அல்ஸர்) நோய்க்குப் பயன்படுத்துகின்ற (Omeprazole) போன்ற குளிசைகள் மற்றும் மனநோய் சிகிச்சைக்கு வழங்கப்படும் சில மருந்துகள் போன்றன இதற்கு உதாரணமாகும். கர்ப்பம் தரித்தல், பாலியல் உறவு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிலும் இது ஏற்படலாம்.

பலவகையான ஹோர்மோன் பிரச்சினைகளும் இதற்குக் காரணமாக அமைகின்றன. தைரொயிட்ஹோர்மோன் குறைவாககரத்தல், மாதவிடாய் பிரச்சினை மற்றும் உடற்பருமனாதலுடன் தொடர்பான சூலகத்தில் சிறு கட்டிகள் ஏற்படுகின்ற நோய் (Poly cystic varian Syndrome) போன்றவை இதற்கு உதாரணங்களாகும். இதேபோல மார்பகத்திலிருந்துபால் சுரப்பதற்கு காரணமான Prolactin ஹோர்மோன் சுரப்பு அதிகமாவதற்கு கபச்சுரப்பியில் இந்த ஹோர்மோன் அதிகம் சுரப்பதும் காரணமாக அமையலாம். கபச்சுரப்பியில் ஏற்படுகின்ற கட்டிகள் (Prolactinoma) இதற்கு உதாரணமாகும். சில வேளைகளில் இக் கட்டிகள் பெரிதாக இருக்கும்போது தலையிடி, பார்வைப் பிரச்சினைகள் போன்றவையும் ஏற்படலாம். இதேபோல வேறு பல வகையான நோய்களும் இப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம்.

எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும் வைத்தியரானவர் தேவைப்படுகின்ற வினாக்களை வினவுவதன் மூலமும் உங்களைப் பரிசோதிப்பதன் மூலமும் இரத்த மற்றும் ஹோர்மோன் பரிசோதனைகள் மூலமும் இதற்கான காரணத்தைக் கண்டறிந்து கொள்ளமுடியும்.

இதன் பின்னர் தேவைக்கேற்ப மேலதிக பரிசோதனைகளையும் மேற்கொண்டு சிகிச்சை வழங்க முடியும் இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு யாழ்போதனா வைத்தியசாலையின் அகஞ்சுரக்கும் தொகுதி ஹோர்மோன் சிகிச்சை நிலையத்தை தொடர்பு கொள்ளமுடியும்.

-மருத்துவர்.M.அரவிந்தன். நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல், சிறப்பு வைத்திய நிபுணர். யாழ் போதனா வைத்தியசாலைld461112

Related posts

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எளிய ஆயுர்வேத குறிப்புகள்!

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளைக் குறிவைக்கும் `டிப்தீரியா’… அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகள்!

nathan

விவாகரத்துக்கு முன்பும்.. பின்பும்..

nathan

குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை பற்றி சொல்லிக் கொடுக்க சில வழிகள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

Appendix பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இலையின் சாறை மட்டும் தடவினாலே தேமல் மறைந்துபோகுமாம்?

nathan

பெண்களின் மன அழுத்தம் இனி மறைந்து போகும்

nathan

தீராத சளி த்தொல்லை தீர…..

nathan

தெரிஞ்சிக்கங்க…அதிகாலை எழுந்ததும் வாயில் இந்த எண்ணெயை விட்டு கொப்பளித்தால் என்ன நடக்கும்?

nathan