தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும்.
தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?
தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும். அவை என்னவென்று பார்க்கலாம்.
* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட இதயம் பலம் பெரும்.
* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
* நெல்லிக்காய் சாருடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
* தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாபிட்டால் குடல் புண், வாய்ப்புண் ஆறும்.
* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.
* தேனுடன் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும், வீக்கம் குறையும்.